Home
Music

சிறிய அறைகளில் சிறப்பான இசை வழங்கும் ஸ்டெம் இன்னோவேஷன் டான்டம் ஒலிபெருக்கிகள்

By Super
சிறிய அறைகளில் சிறப்பான இசை வழங்கும் ஸ்டெம் இன்னோவேஷன் டான்டம் ஒலிபெருக்கிகள்
பொதுவாக தங்களுடைய கனனியின் ஒலிப்பெருக்கிகளைப் பற்றி மக்கள் கவலை கொள்வதில்லை. ஆனால் கனனியை பொழுதுபோக்காகவே பயன்படுத்தும் ஒரு சிலரும் உண்டு. அவர்கள் தரமான வீடியோ மற்றும் ஆடியோ அவுட்புட்டுகளை பெரிதும் விரும்புகின்றனர். அதற்காக அவர்கள் பணம் செலவழிந்தாலும் அதைப் பற்றி கவலைப்படுவது இல்லை. அப்படிப்பட்டவர்களுக்காகவே சிறந்த தரத்துடன் ஸ்டெம் இன்னோவேஷன் டான்டம் ஒலிபெருக்கிகளை வழங்குகிறது.

இந்த புதிய டான்டம் ஒலிப்பெருக்கிகள் யுஎஸ்பி போன்ற நவீன தொழில் நுட்பங்களையும் சப்போர்ட் செய்கிறது. இதில் பேஸ் ரிப்லக்ஸ், ஹெட்போன் அவுட்புட், டிஜிட்டல் சிக்னல் ப்ராசஸிங் வசதிகள் ஏராளம். இந்த டாண்டம் ஒலிப்பெருக்கிகள் ஆப்பிளின் சகோதரர்களைப் போல் இருக்கின்றன. ஏனெனில் இவை அலுமினியம் நிறம் கொண்டு ஸ்பார்டன் டிஸைனுடன் ஐமேக்ஸ் மற்றும் மேக்புக்ஸ் போன்ற ஆப்பிளின் ஹார்வேர்களைக் கொண்டுள்ளன.

இது ஆப்பிளைப் போன்ற நிறத்தில் இருந்தாலும் இது மேலும் அழகாக இருக்கிறது. இதன் ஒலிப்பெருக்கிகள் ட்ரேப்சோடியல் அமைப்பில் துளைகள் கொண்ட கருப்பு துணியால் முன்பக்கம் மூடப்பட்டிருக்கிறது. அதுபோல் ஏசி பவர் இந்த ஒலிப்பெருக்கிகளுக்கு தேவையான ஒன்றாகும். அதனால் இவை போர்ட்டபுள் கிடயாது. இந்த ஒலிப்பெருக்கியில் உள்ள லைன் ஜாக் யுஎஸ்பி போர்ட் இல்லாத இடங்களில் பயன்படும்.

யுஎஸ்பி போர்ட் கேபிள் மூலம் இந்த டான்டம் ஒலிபெருக்கிகளை கனணியோடு இணைக்க முடியும். இது சரியாகச் செயல்பட தனித்தனியாக வயர்கள் உள்ளன. இதன் வலது பக்க ஒலிப்பெருக்கி இயர்போன் போர்ட்டும் வால்யூம் கண்ட்ரோலும் பெற்றுள்ளன. மேலும் இந்த ஒலிப்பெருக்கி இயங்குகிறதா என்று பார்க்க விளக்கும் உள்ளது. மேலும் இந்த வலது ஒலிப்பெருக்கி மூலம் இடது ஒலிப்பெருக்கியை இணைக்க முடியும். குறிப்பாக ஜாஸ் மற்றும் ராக் இசையை இந்த டாண்டம் ஒலிப்பெருக்கிகளை இனிமையாக அனுபவிக்கலாம்.

பெரிய இடங்களில் இந்த டாண்டம் ஒலிப்பெருக்கிகள் அவ்வளவு வலிமையாக இருக்காது. சிறிய அறைகள் மற்றும் சிறிய இடங்களில் இது பக்காவாக இருக்கும். மேலும் இவற்றை ஐபோட் மற்றும் ஐபேடுகளில் இணைக்க முடியும். இதன் விலை இந்தியாவில் ரூ.3,500ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X