Home
Music

புதிய வயர்லெஸ் ஹெட்போன்: சோனி அறிமுகப்படுத்துகிறது

By Super
புதிய வயர்லெஸ் ஹெட்போன்: சோனி அறிமுகப்படுத்துகிறது
பொதுவாக சோனியின் டிஜிட்டல் டிவைஸ்கள் புதிதாக அறிமுகம் ஆகும் போதெல்லாம் மக்கள் அவற்றை விரும்பி வாங்குவார்கள். இப்போது மக்களுக்கு மகிழ்ச்சியை வழங்கும் விதத்தில் சோனி நிறுவனம் புதிய சோனி எம்டிஆர் வயர்லஸ் ஸ்டீரியோ சிஸ்டத்தை வழங்க இருக்கிறது.

வயர்லஸ் ஹெட்போன்களுக்கு ஏகப்பட்ட தேவை உண்டு. அதனால் சோனியின் புதிய ஹெட்செட்டுக்கு இப்போதே பலத்த எதிர்பார்ப்பு தொடங்கி விட்டது. இந்த ஹெட்செட் 300மிமீ ட்ரைவ் ஆகும். குறிப்பாக இசையில் இது கரை கடந்துவிடும் என நம்பலாம்.

இதன் ட்ரான்ஸ்மிசன் 90டிகிரி ஆங்கிள் கொண்டு வலிமையான பேட்டரியையும் கொண்டிருக்கிறது. இதன் பேட்டரியின் மூலம் 60 மணி நேரம் நாம் தொடர்ந்து இசை கேட்கலாம். மேலும் இது ரீஜார்ஜபுள் வசதி கொண்ட நிகேட் பேட்டரியை (என்சி - எஎ- ஹச்ஜே) கொண்டிருக்கிறது. இந்த பேட்டரியின் பேக்கப் 34 மணி நேரமாகும். மேலும் பேட்டரி ரீஜார்ஜ் செய்வதற்கான எசி அடாப்டரையும் இது வழங்குகிறது. இதில் தொடர்பு கோர்டும் உள்ளது.

மேலும் இந்த ஹெட்செட்டில் எந்த சூழ்நிலையிலும் பயன்படுத்தும் யூனிமேட்ச் ப்ளக் அடாப்டரையும் வழங்குகிறது. இதன் முக்கிய அம்சம் என்னவென்றால் இதன் ட்ரான்ஸ்மிஷன் அளவு மிகப் பெரியது. அதாவது இந்த ஹெட்செட்டைக் கொண்டு 24 அடி தூரம் சென்றாலும் சிக்னல் தெளிவாக இருக்கும். மேலும் இது எடை குறைவாக இருப்பதால் நாம் பல மணி நேரம் தொடர்ச்சியாக இசை கேட்டாலும் நமக்கு களைப்பு ஏற்படாது.

சோனி எம்டிஆர் வயர்லஸ் ஹெட்போன் தொழில் நுட்பமும் பக்காவாக உள்ளது. அதாவது வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் தனித்தனியாக ட்ரான்ஸ்மிஷன் சேனல்கள் உள்ளன. அதனால் இசை மிகத் துல்லியமாக இருக்கும்.

மேலும் இந்த ஹெட்செட்டை டிவி, கனனி போன்ற மற்ற டிவைஸ்களோடு எளிதில் இணைக்க முடியும். மேலும் இதன் 300மிமீ ட்ரைவர்கள் பேஸ் மீயூக்கையும் அளவான ப்ரீக்வென்சியையும் வழங்குகிறது. மேலும் இதன் பவர் ஆன் மற்றும் ஆப் பட்டன்கள், மியூட் பட்டன்கள் ஆகியவை மிகச் சிறப்பாக உள்ளன.

எத்தகையச் சூழலிலும் திகட்டாத இசையைக் கேட்க வேண்டுமானால் நாம் சோனி எம்டிஆர் வயர்லஸ் ஹெட்போனைத் தேர்ந்தெடுக்கலாம். இதன் விலை ரூ.1,750 ஆகும். ஆன்லைன் மூலமாகவோ அல்லது சோனி ஷோரூகளில் இதை நாம் வாங்கலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X