காதுகளுக்கு அலர்ஜி ஏற்படுத்தாத நோக்கியா ப்ளூடூத் ஹெட்செட்

By Super
|
காதுகளுக்கு அலர்ஜி ஏற்படுத்தாத நோக்கியா ப்ளூடூத் ஹெட்செட்
புதுமைக்கும் ஸ்டைலுக்கும் உதாரணமாக நோக்கியாவின் புதிய ஹெட்செட் மாடல்களைச் சொல்லலாம். ஆம் நோக்கியாவின் பிஎச்-806 ஹெட்செட்டுகள் ரெட்டாட் டிசைன் விருது, சிஇஎஸ் டிஸைன் மற்றும் இன்ஜினியரிங் இனோவசன் விருது மற்றும் ஐஎப் டிசைன் விருது போன்ற விருதுகளை வாங்கியிருக்கின்றன. அதுபோல் நோக்கியாவின் ஜே பிஎச்-806 ஹெட்செட்டுகள் பாதுகாப்பிற்கும், வசதிகளுக்கும், ஸ்டைலுக்கும் மற்றும் அடக்கத்திற்கும் சிறப்பான பெயரைப் பெற்றுள்ளன.

நோக்கியாவின் ஜே பிஎச்-806 ஹெட்செட்டுகள் ஸ்டெயின்லெஸ் இரும்பினால் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதல் நிக்கல் தகடுகள் இல்லாததால் இதை நாம் காதில் பொருத்தி பாடல் கேட்டாலும் நமக்கு அலர்ஜி ஏற்படாது. அதுபோல் இதன் எடையும் குறைந்த அதாவது 8 கிராமில் இருப்பதால் இதன் எடையை நமது காது உணராது. இந்த ஹெட்செட்டுகள் மூலம் எளிதாக அழைப்புகளை நாம் பெற முடியும். மற்றும் அழைப்புகளையும் நாம் கொடுக்க முடியும்.

நோக்கியாவின் ஜே பிஎச்-806 ஹெட்செட்டுகளை இயக்குவது மிகவும் எளிதானதாகும். நமது மொபைல் இந்த ஹெட்செட்டில் இணைந்திருக்கும் போது நமக்கு இண்டிகேட்டர் விளக்கு தெரியும். மேலும் அழைப்புகளை எடுக்கவும், நிறுத்தவும், திருப்பி விடவும் மற்றும் ஹெட்செட்டை ஆன் செய்யவும் மற்றும் ஆப் செய்யவும் என ஏராளமான மல்டிபங்சன் கீகள் உள்ளன.

நோக்கியாவின் ஜே பிஎச்-806 ஹெட்செட்டுகளை பயன்படுத்த வேண்டுமானால் முதலில் இதை நமது மொபைலோடு இணைக்க வேண்டும். அதுபோல் பொமைலை ஆன் செய்வதற்கு முன் இந்த ஹெட் செட்ட ஆப்பில் வைத்திருக்க வேண்டும். பின் நமது காதில் இந்த ஹெட் செட்டைப் பொருத்தியபின் இதன் மல்டிபங்சன் கீயை அழுத்த வேண்டும். அப்போது மொழியைத் தேர்ந்தெடுக்குமாறு அறிவிப்பு கொடுக்கப்படும். பின் அதைத் தேர்ந்தெடுத்து தயாராவதற்கு ஒரு 3 நிமிடங்கள் ஆகும். பின் நமது மொபைலில் உள்ள ப்ளூடூத் இணைப்பைப் பார்த்து அது ஹெட் செட்டோடு இணைந்திருக்கிறதா என்று சரி செய்து கொள்ள வேண்டும். இப்போது நமது ஹெட் செட் நமது மொபைல் போனோடு இணைந்து இருக்கும்.

நோக்கியாவின் ஜே பிஎச்-806 ஹெட்செட்டுகளில் உள்ள மல்டிபங்சன் கீதான் இந்த ஹெட் செட்டைக் கட்டுப்படுத்தும் நங்கூரமாக இருக்கிறது. அழைப்பு வரும்போது இந்த பட்டனை ஒரு முறை அழுத்தினால் அந்த அழைப்புக்கு பதில் அளிக்கலாம். இருமுறை அழுத்தினால் அழைப்பை நிராகரித்து விடலாம். அதுபோல் ரீடயல் செய்வதற்கும் இந்த பட்டனை ஒரு முறை அழுத்தினால் போதும். அதுபோல் இந்த பட்டனை 2 வினாடிகள் அழுத்தினால் அழைப்புகளை திருப்பிவிடலாம். அதுபோல் இதன் ஒலி அளவும் தானாகவே சரி செய்து கொள்ளும்.

நோக்கியாவின் ஜே பிஎச்-806 ஹெட்செட்டுகள் வேறுபட்ட பல அளவுகளில் வருகின்றன. ஜார்ஜருக்கான் மைக்ரோயுஎஸ்பி கனக்டரும் அதே நேரத்தில் இதை எடுத்துச் செல்வதற்கான க்ளிப்பும் உள்ளன. நாம் ஓட்டுனர் இருக்கையில் இல்லாத போது இந்த ஹெட்செட்டை க்ளிப்பில் மாட்டிவைத்துக் கொள்ளலாம். இதிலுள்ள ஆல்வேய்ஸ் ரெடி பங்சன் வசதி இந்த ஹெட்செட்டைப் பயன்படுத்துவோருக்கு அழைப்பு வரும்போது இந்த ஹெட்செட்டை க்ளிப்பிலிருந்து எடுத்து எளிதாக காதுகளில் பொருத்திக் கொள்ளலாம்.

இந்த புதிய நோக்கியாவின் ஜே பிஎச்-806 ஹெட்செட்டுகளின் விலை ரூ.7,100 ஆகும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X