சோனி பிஎஸ்3 வயர்லஸ் ஸ்டீரியோ ஹெட்செட்- சிறப்பு பார்வை

Posted By: Staff

சோனி பிஎஸ்3 வயர்லஸ் ஸ்டீரியோ ஹெட்செட்- சிறப்பு பார்வை
சோனியின் சரித்திர வீடியோ கேம் சோனி ப்ளேஸ்டேஷன் 3க்கு சோனி நிறுவனம் மேலும் பெருமை சேர்க்கவுள்ளது. அதாவது சோனி ப்ளேஸ்டேஷனை அனுபவிக்க இனி ப்ளேஸ்டேஷன் 3 வயர்லஸ் ஸ்டீரியோ ஹெட் செட்டை இனிப் பயன்படுத்தலாம்.

இந்த ஹெட் செட்டை ஏற்கனவே வாடிக்கையாளர்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இந்த சோனி பிஎஸ்3 வயர்லஸ் ஹெட்செட் யுஎஸ்பி ரிசிவர் கொண்டிருக்கும். அதுபோல் பயன்படுத்துபவர்களுக்கு மானுவலும் வழங்கப்படும்.

இந்த ஹெட் செட் யுஎஸ்பி ஜார்ஜிங் கேபிள் கொண்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று பலர் தெரிவித்திருக்கின்றனர். இந்த ஹெட் செட் இண்டர்னல் பேட்டரிகள் கொண்டிருப்பதால் நீளமான வயர்கள் இதற்குத் தேவையில்லை. இதை இணைப்பது மிக எளிது. இது யுஎஸ்பி ரிசீவர் கொண்டிருப்பதால் யுஎஸ்பி ஸ்லாட்டில் இணைத்தால் இது இயங்கத் தொடங்கிவிடும்.

மேலும் ஒலி அளவையும் இந்த ஹெட் செட்டில் சரி செய்து கொள்ளலாம். மேலும் வீடியோ கேமை இதில் விளையாடும் போது ஆடியோ அவுட்புட்டைக் குறைத்து விட்டு நாம் விளையாடிக் கொண்டே நமது நண்பர்களோடு உறையாடலாம்.

இதன் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால் இது ரிட்டராக்டபுள் மைக் கொண்டுள்ளது. இதை வேண்டும் போது விரித்துக் கொள்ளலாம் அல்லது மடக்கிக் கொள்ளலாம். இது வெள்ளி பட்டன் கொண்டிருப்பதால் 7.1 சரவுன்ட் ஒலியில் இதை டேர்ன் ஆன் அல்லது டேர்ன் ஆப் செய்ய முடியும். மேலும் இந்த ஹெட் செட்டுகள் காதுகளுக்கு மிக மென்மையாக இருக்கின்றன. மேலும் ஹெட்செட்டின் செயல்பாட்டை நாம் திரையில் பார்க்க முடியும்.

இதன் டிஸ்ப்ளேயில் பேட்டரியின் அளவு, மைக்கின் மோட், 7.1 வெர்ட்ச்சுவல் சரவுன்ட் ஒலி ஆகிய அனைத்தையும் நாம் பார்க்கலாம். வீடியோ கேம் விளையாடும் போது நமக்கு டிஸ்ப்ளே தகவல்கள் தேவை இல்லையானால் தானாகவே டிஸ்ப்ளே மறைந்து விடும்.

அதாவது மைக் மியூட் அல்லது பவர் பட்டனை இரண்டு முறை அழுத்தினால் போதும். மேலும் இதை ஜார்ஜ் செய்வதும் மிக எளிது. அதற்கான சிக்னல்களும் அவற்றிலேயே உள்ளன. மேலும் இதன் எடையும் மிக குறைவானதாகும். இதன் விலை இந்தியாவில் ரூ.5,000 ஆகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot