இசை வெள்ளம் வழங்கும் சாம்சங் எச்டி-டி 555 டிவிடி ஹோம் தியேட்டர்

Posted By: Staff

இசை வெள்ளம் வழங்கும் சாம்சங் எச்டி-டி 555 டிவிடி ஹோம் தியேட்டர்
சாம்சங் நிறுவனம் சாம்சங் எச்டி-டி 555 என்ற புதிய ஹோம் தியேட்டரை அறிமுகப்படுத்துகிறது. இதன் ஸ்டைல் மற்ற ஹோம் தியேட்டர்களை விட வேறுபடாடு அதிகம் இல்லாவிட்டாலும் இதன் தனித்துவம் மிகச் சிறப்பாக உள்ளது. விலையைப் பார்த்தால் சோனியின் பிடிவி இ880 புளூ ரேய் எச்டிஐபியை விட சற்று அதிகமாக உள்ளது.

இந்த புதிய ஹோம் தியேட்டர் தரமான சக்தி வாய்ந்த பொருள்களால் தயாரிக்கப்பட்டிருக்கிறது. டால்பாய் என்ற பெயரைக் கொண்ட 4 ஸ்பீக்கர்களைக் கொண்டு களம் ஆடுகிறது. இதன் துணை ஊபர் நம் மனதைக் கிளர்ந்து எழச் செய்து விடும். இதன் மத்திய பகுதி எல்சிடி டிஸ்ப்ளேயைக் கொண்டு உள்ளது.

மேலும் இது யுஎஸ்பி போர்ட் கொண்டுள்ளதால் பென்ட்ரைவ்களைப் பயன்படுத்த முடியும். ஆனால் இதில் எச்டிஎம்ஐ போர் இல்லை. அதனால் இதில் ப்ளூ ரேய் டிவைஸ்களைப் பயன்படுத்த முடியது. இதில் எக்ஸாஸ்ட் விசிறி உள்ளதால் இது ஆம்ப்ளிபயரை குளுமையாக வைத்திருக்கும்.

இது பியானோ வடிவில் உள்ளதால் மிக கவரும் விதத்தில் உள்ளது. மேலும் இதன் மெல்லிய டிவிடி ப்ளேயர் மற்றொரு சிறப்பம்சமாகும். இதன் தொடு கண்ட்ரோல் கீகள் மிக அருமையாக உள்ளன. இதன் முகப்பு மைக்ரோ போன் போர்ட்கள் திறமையான கரோக் டூயல்களாக செயல்படுகின்றன.

மேலும் இதில் 8 செக்மன்ட் ஸ்டைல் எல்இடி மாட்ரிக்ஸ் டிஸ்ப்ளே மற்றும் யுஎஸ்பி உள்ளதால் இதில் ஆடியோ மற்றும் வீடோ ப்ளேபேக்குகளை எளிதாக இயக்க முடியும். இதன் ரிமோட் கண்ட்ரோல் மற்றும் அதன் பட்டன்கள் ப்ளாஸ்டிக்கில் உள்ளதால் அது சற்று குறைபாடாக தெரிகிறது. ஆனால் இதன் ஒலி அமைப்பில் டேக்டைல் பம்புகள் உள்ளதால் அந்த குறைபாடு மறைந்து விடும்.

சாம்சங் எச்டிடி-555க்கு பல உத்தரவாதங்கள் வழங்கப்படுகின்றன. அதனால் இதை நாம் துணிந்து வாங்கலாம். இதன் விலை இந்தியாவில் ரூ.28,250 ஆகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot