Home
Music

செவிகளைக் குளிர்விக்கும் ஜப்ரோ ப்ளூடூத் ஹெட் செட்டுகள்

By Super
செவிகளைக் குளிர்விக்கும் ஜப்ரோ ப்ளூடூத் ஹெட் செட்டுகள்
ப்ளூடூத் ஹெட்செட்டுகள் இப்போது கட்டாயமாக இருக்கின்றன. ஏனெனில் இந்த ஹெட்செட்டுகளில் பாடல் கேட்பதை அனைவரும் விரும்புகின்றனர். அதை மனதில் கொண்டு ஜப்ரா நிறுவனம் புதிய ப்ளூடூத் செட்டுகளை அறிமுகப்படுத்துகிறது. இந்த ஹெட் செட்டுகள் மூலம் ஒரே நேரத்தில் 2 மொபைல்களில் தொடர்பு படுத்த முடியும். இந்த ஜப்ரோ ஈஜிகோ ப்ளூடூத் ஹெட்செட்டுகளை சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் ஜப்ரா நிறுவனம் வழங்க இருக்கிறது.

ஏற்கனவே குறிப்பிட்டது போல் ப்ளூடூத் உள்ள இரண்டு மொபைல்களோடு ஒரே நேரத்தில் இந்த ஈசிகோ ஹெட் செட்டுகளை இணைக்க முடியும். அதே நேரத்தில் வரும் அழைப்புகளையும் நாம் பெற முடியும். ஆனால் அழைப்பகளை நாம் எடுக்கும் போது வீடயோ அல்லது மீயூசிக் ப்ளேபேக் நின்று விடும்.

இந்த ஹெட் செட்டுகள் இண்டக்ரேட் டிஜிட்டல் சிக்ன்ல் ப்ராசஸிங் தொழில் நுட்பம் கொண்டுள்ளதால் இதன் ஒலி அமைப்பு மிக தரமாக துல்லியமாக இருக்கும். அதே போல் கிரிஸ்டல் கிளியர் ஒலியையும் இரைச்சல் அல்லது எக்கோ ரிடக்சனையும் கொடுக்கிறது. இதை நமது காதுகளில் அணிந்து கொள்வதும் இயக்குவதும் மிக எளிதாக இருக்கும். அதற்காக இந்த ஹெட்செட்டுகள் அல்டிமேட் கம்போர்ட் இயர் ஜெல்ஸ் கொண்டு வருகின்றன. அதனால் காதுகளின் அளவுகளுக்கு ஏற்ப நாம் இதை பொருத்தமாக அணிந்து கொள்ளலாம்.

மேலும் இதில் வாய்ஸ் கைடன்ஸ் தொழில் நுட்பம் உள்ளதால் உரிய நேரத்தில் இதை ஜார்ஜ் செய்ய வேண்டுமென்று இந்த ஹெட் செட்டே அறிவித்து விடும். அதே போல் இந்த ஹெட் செட் மற்ற டிவைஸ்களோடு தொடர்பில் இருக்கிறதா இல்லையா என்று அறிவித்து விடும். இதன் டிஸ்ப்ளே பெரிய எழுத்துக்களைக் கொண்டிருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக இருக்கும். மேலும் இது ஈசி டு லொக்கேட் ஸ்லைடர்ஸ் கொண்டிருப்பதால் இதன் மின் திறனை இணைக்கப்பட்ட ப்ளூடூத் மொபைல்களுக்கு ஏற்ப சரி செய்ய முடியும்.

ஈசிகோ ஹெட்செட்டுகள் பின்பக்க கம்பாட்டிபிள் வி2.1 ப்ளூடுத் இணைப்பு வசதி பெற்றுள்ளதால் மற்ற வி2.0 ப்ளூடூத் ஹெட் செட்டுகளை விட மிக அம்சமாக இருக்கும். மேலும் ஹெட் செட் அணிந்திருக்கிறோம் என்பதே தெரியாத அளவிற்கு இவை மிக மென்மையாக இருக்கின்றன. ஆன்ஸ்வர் அல்லது என்ட் பட்டனைத் தட்டினால் இருக்கும் தொடர்பைத் துண்டித்து விட்டு புதிய இணைப்பை ரீசெட் செய்ய முடியும்.

ஈசிகோ ஹெட்செட்டுகளின் எடை 8 கிராம்களாகும். இவை ஒரு வருட வாரண்டியுடன் ரூ.2150க்கு வருகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X