Home
Music

கணினியை அலங்கரிக்க வரும் ஜீனியஸின் குட்டி ஸ்பீக்கர்கள்

By Super
கணினியை அலங்கரிக்க வரும் ஜீனியஸின் குட்டி ஸ்பீக்கர்கள்
ஜீனியஸின் யுஎஸ்பி எஸ்பி-யு115 ஸ்பீக்கர்கள் முதல் பார்வையிலேயே நமது மனங்களைக் கவர்ந்து விடுகின்றன. அதுபோல் அதன் சிறப்பு அம்சங்களும் மிகப் பக்காவாக உள்ளன.

இந்த ஜீனியஸின் யுஎஸ்பி எஸ்பி-யு115 ஸ்பீக்கர்களுக்கு மின் இணைப்பு கொடுத்தவுடன் யுஎஸ்பி போர்ட் மூலம் இவற்றை நேரடியாக டெஸ்க்டாப் கனிணி மற்றும் லேப்புகளோடு இணைக்க முடியும்.

இந்த ஜீனியஸின் யுஎஸ்பி எஸ்பி-யு115 ஸ்பீக்கர்கள் மிகச் சிறியதாக அடக்கமாக உள்ளன. இதன் மொத்த ஆர்எம்எஸ் அவுட்புட் 1.5 வாட்ஸ் ஆகும்.

மேலும் இது 3 வாட்ஸ் மின்சாரம் வரை சப்போர்ட் செய்கிறது. இதன் யுஎஸ்பி போர் வசதிதான் இதன் முக்கிய சிறப்பு ஆகும். இந்த ஸ்பீக்கர்கள் க்ளோசி முகப்பு பேனலுடன் வடிவமைக்கப்பட்டு ஒலி கட்டுப்பாட்டு அமைப்பும் கொண்டுள்ளது.

இந்த 50மிமீ ஜீனியஸின் யுஎஸ்பி எஸ்பி-யு115 ஸ்பீக்கர்கள் தெளிவான ஒலியை வழங்குகின்றன. இதன் யுஎஸ்பி போர்ட் மூலம் நமது டிவஸ்களில் இணைத்தால் போதும் தரமான இசையை இந்த ஸ்பீக்கர்கள் வழங்கும். மேலும் இந்த ஸ்பீக்கர்களை எந்த டிவைசோடும் இணைக்க முடியும்.

குறிப்பாக நமது பிசி, லேப்டாப் மற்றும் நெட்புக் ஆகியவற்றோடு மிக எளிதாக இணைக்க முடியும். அதுபோல் எம்பி3 ப்ளேயர் மற்றும் சிடி ப்ளேயர் ஆகியவற்றோடும் இணைக்க முடியும்.

ஜீனியஸின் யுஎஸ்பி எஸ்பி-யு115 ஸ்பீக்கர்கள் பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளன. இவை பல நிறங்களில் வருகிறது. அதாவது ஷைனி கருப்பு, சாப்பிர் ஊதா, ரூபி சிவப்பு மற்றும் க்ராஸ் வெள்ளை போன்ற கலர்களில் வந்து நம்மை அசத்துகின்றன. மேலும் இந்த ஸ்பீக்கர்களை எந்த இடத்திலும் வைக்க முடியும்.

ஜீனியஸின் யுஎஸ்பி எஸ்பி-யு115 ஸ்பீக்கர்கள் மொத்த அளவைப் பார்த்தால் அது 70 X 111 X 70 மிமீ ஆகும். இதன் எடையும் 400 கிராம் மட்டுமே கொண்டுள்ளதால் மிக எளிதாக இதை எடுத்துச் செல்ல முடியும். மேலும் விண்டோஸ் 7, விஸ்டா மற்றும் மேக் 10.0 போன்ற எந்த இயங்குதளம் கொண்ட கனிணிகளிலும் இதை இணைக்க முடியும்.

ஜீனியஸின் யுஎஸ்பி எஸ்பி-யு115 ஸ்பீக்கர்கள் 2 ஸ்பீக்கர்களுடன் வருகிறது. இதன் யூசர் மெனுவல் மல்டி மொழிகளைக் கொண்டது. இதன் விலையைப் பார்த்தால் மிக ஆச்சரியமாக இருக்கும். அதாவது இதன் விலை இந்தியாவில் ரூ.550 மட்டுமே.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X