ஐபோனுக்கான புதிய ஸ்பீக்கர்: கிரிபின் அறிமுகம்

Posted By: Staff

ஐபோனுக்கான புதிய ஸ்பீக்கர்: கிரிபின் அறிமுகம்
ஐபோன் மற்றும் ஐபோடுகள் மக்களை மிகவும் பாதித்த மிக முக்கிய கண்டுபிடிப்புகளாகும். மேலும் இவை மக்களுக்கு பொழுதுபோக்கையும் தொடபு வசதிகளையும் மிகவும் வித்தியாசமான கோணத்தில் தருகின்றன. இந்த இரண்டுமே இவற்றின் தந்தையான் ஸ்டீவ் ஜாப்பை மக்களின் மனதில் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும்.

ஆப்பிள் இவற்றை அறிமுகப்படுத்திய போது இது பெரிய புரட்சியையே படைத்தது. ஆனால் மனித மூளை எப்போதுமே வளர்ந்து கொண்டிருக்கிறது. அதுபோல் புதிது புதிதாக தேடிக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக அதிகமான் பாடல்களைப் பதிவிறக்கம் செய்த பின் ஐபோட் மற்றும் ஐபோனின் ஒலி அமைப்பின் தரம் குறைய ஆரம்பித்தது. தயாரிப்பாளர்கள் இந்த மனித மூளையை அறிந்து அதற்கு ஏற்றார்போல வலிமையான அதே நேரத்தில் போர்ட்டபுள் ஸ்பீக்கர் டோக்குகளை வடிவமைக்க ஆரம்பித்தனர்.

அதன் தொடர்ச்சியாக கிரிபின் ஐபோனுக்கான பயன ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. குறிப்பாக ஆப்பிளின் ஐபோட் மற்றும் ஐபோனிலிருக்கும் ஸ்பீக்கர்கள் மூலம் வெகு நேரம் நாம் பாடல்களைக் கேட்க முடியாது. அதுபோல் படங்களைப் பார்க்க முடியாது.

நாம் ஐபோன் அல்லது ஐபோடின் பக்கத்தில் இருக்க வேண்டும் அல்லது இயர் போனைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் இந்த க்ரிபின் பயண ஸ்பீக்கரை இந்த ஐபோன் மற்றும் ஐபோடில் பயன்படுத்தினால் தரமான இசையை நாம் கேட்க முடியும்.

க்ரிபின் பயண ஸ்பீக்கரை ஐபோன் மற்றும் ஐபோடில் இணைத்தால் போதும். அதற்காக நமக்கு பேட்டரியோ அல்லது மின் இணைப்போ தேவையில்லை. அதாவது ஐபோன் மற்றும் இந்த க்ரிபின் பயண ஸ்பீக்கரோடு ஒரு சிறிய டிவைஸை எடுத்துடச் சென்ரால் போதுமானது.

இதில் நமது ஐபோட் அல்லது ஐபோனை வைத்துக் கொள்ளலாம். மேலும் இது மினி யுஎஸ்பி போர்ட் கொண்டுள்ளதால் நமது ஐபோனையும் ஜார்ஜ்

க்ரிபின் பயண ஸ்பீக்கரின் குறைபாடு என்னவென்றால் இதிலிருந்து வரும் ஒலி லேட்டாப்பிலிருந்து வரும் ஒலி அளவிற்கு சாதாரணமாகத்தான் இருக்கும். ஆனால் இதில் பேஸ் ஒலி அமைப்பும் உள்ளது.

நாம் க்ரிபின் பயண ஸ்பீக்கரோடு நமது ஐபோன் அல்லது ஐபோடை இணைத்துவிட்டால் ஐபோனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடும். நாம் ஐபோனை ஆன் செய்து விட்டால் பாடல் ஆரம்பித்துவிடும். பின் க்ரிபின் பயண ஸ்பீக்கரிலிருக்கும் பட்டன்களை சரி செய்தால் நாம் ஒலி அமைப்பை மாற்றி வைத்துக் கொள்ளலாம்.

இந்த க்ரிபின் பயண ஸ்பீக்கரின் விலையைப் பார்த்தால் ரூ.1500 ஆகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot