அதிக மின் திறனுடன் வரும் ஒஆர்பி ஆடியோ ஸ்பீக்கர்கள்

Posted By: Staff

அதிக மின் திறனுடன் வரும் ஒஆர்பி ஆடியோ ஸ்பீக்கர்கள்
தற்போது சந்தைக்கு வந்திருக்கும் நவீன ஸ்பீக்கர்களில் ஓஆர்பி ஆடியோ ஸ்பீக்கரும் ஒன்றாகும். இதன் ஸ்டைலைப் பார்க்கும் போது இதை 21ஆம் நூற்றாண்டின் ஆடியோ ஸ்பீக்கர் என்றே அழைக்கலாம். இதிலிருக்கும் ஆம்ப்ளிபயர் நம்மை கிறங்கடிக்கும் இசையைத் தருகிறது.

இந்த ஸ்பிக்கர் ஓஆர்பி மோட் 1 மற்றும் மோட் 2 ஸ்பீக்கர்களுடன் வருகிறது. இவற்றை எளிதாக கனனி மற்றும் ஐபோடுகளுடன் இணைக்க முடியும்.

ஒஆர்பி ஆடியோ ஸ்பீக்கரில் இருக்கும் மினி கம்பேக்ட் ஆம்ப்ளிபயர் ஏராளமான அம்சங்களைக் கொண்டுள்ளது. அதாவது இது டி-க்ளாஸ் தரமான ஒலியை வழங்குகிறது.

அதுபோல் இதில் இரைச்சலும் இருக்காது. மேலும் இதன் விலையும் மிகக் குறைவே. இந்த மினி டி-கம்பேக்ட் ஆம்பிளிபயரின் நீள, அகல மற்றும் உயரத்தைப் பார்த்தால் அது 6*51/2*11/4 ஆகும். இது ஒரு ஸ்டேண்டர்ட் ஹெட்போன் இன்புட்டையும் கொண்டுள்ளது.

பொதுவாக இரண்டு வகை மினி ஹெட்போன் இன்புட்டுகள் உண்டு. ஒன்று மினி ஹெட்போனிலிருந்து மினி ஹெட்போனுக்குச் செல்லும் வயராகும்.

மற்றொன்று மினி ஹெட்போனிலிருந்து ஆர்சிஏ கேபிளுக்கு செல்வதாகும் . இந்த ஹெட்போனிலிருந்து ஆர்சிஎவுக்கு செல்லும் இன்புட் மூலம் நாம் டிவிடி ப்ளேயர் அல்லது டிவி மூலம் இணைக்க முடியும். மினி ஹெட்போனிலிருந்து மினி ஹெட்போனுக்குச் செல்லும் வயர் மூலம் நாம் வேறு டிவைஸ்களோடு இணைக்க முடியும்.

ஒஆர்பி ஆடியோ ஸ்பீக்கரின் மின் திறன் வசதிகளைப் பார்த்தால் அது 15 வாட்ஸ்/சிஎச் ஆகும். அதாவது அதன் ட்ஸ்டார்ஷன் 0.04% டிஎச்டி+என் ஆதாவது 9 வாட்ஸ் மற்றும் 4 ஓம்களாகும். இதன் செயல்திறன் 88% ஆகும். இது 102டிபி டைனமிக் ரேஞ்சை வழங்குகிறது.

இதன் இன்புட் ரேஞ்ச் 100வி முதல் 240வி ஏசி கொண்டு 50 முதல் 60 ஹெர்ட்ஸ் வரையிலான ப்ரீக்வனசியைக் கொண்டுள்ளது. அதுபோல் இந்த டிவைஸ் 1 மாத இலவச டரயல் திட்டத்துடன் வருகிறது.

ஒஆர்பி ஆடியோ ஸ்பீக்கரின் விலையைப் பார்த்தால் அது ரூ.14,900 ஆகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot