Home
Music

சோனியின் புதிய இசை அவதாரம் சோனி என்டபுள்யுஸட்-எ844

By Super
சோனியின் புதிய இசை அவதாரம் சோனி என்டபுள்யுஸட்-எ844
சோனி நிறுவனம் தனது முக்கியமான புதிய எம்பி3 ப்ளேயரை அறிமுகப்படுத்துகிறது. இதன் பெயர் சோனி என்டபுள்யுஸட்-எ844 அகும். இது ப்ரவுன் நிறத்தில் அடக்கமான அளவில் இருக்கிறது. இந்த பேழை தரமான இசையோடு தரமான் டிஜிட்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதிகளை வழங்குகிறது.

சோனி என்டபுள்யுஸட்-எ844ன் மிக முக்கியமான அம்சம் அதன் அடக்கமான தோற்றமாகும். இதன் டிஸ்ப்ளே 7.1 செமீ அளவு மட்டுமே கொண்டுள்ளத. இதன் ஒஎல்இடி டிஸ்ப்ளே வீடியோக்களையும் இயக்கும் வசிதியைக் கொண்டது. இதன் டிஸ்ப்ளே 400X240 பிக்சல்களையும் 262144 நிறங்களையும் வழங்குகிறது. மேலும் இதன் எப்எம் ட்யூனர் ரேடியோ பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.

சோனி என்டபுள்யுஸட்-எ844 ஆடியோ மற்றும் ஆடியோ வசதிகளை வழங்குகிறது. இதன் ஆடியோ க்ளியர் பேஸ் மற்றும் க்ளியர் ஸ்டீரியோவோடு வருகிறது. ஒலி அமைப்பிற்கு இது 5 பேண்ட் ஈக்வலைசர்களைக் கொண்டிருக்கிறது.

இந்த ஈக்வலைசர்கள் ஹெவி, பாப் மற்றும் யுனிக் போன்ற வசிதகளுடன் இருக்கிறது. ஒரே நேரத்தில் ஏராளமான பாடல்களை இதில் சேமிக்க முடியும். அதாவது இதில் 1800 பாடல்களை சேமிக்க முடியும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன. மேலும் இதில் 120 மணி நேரம் ரிக்கார்டிங் செய்ய முடியும். சோனி என்டபுள்யுஸட்-எ844 தொடர்ந்து 29 மணி நேர ப்ளேபேக்கைக் கொண்டிருக்கிறது.

வீடியோ வசதியைப் பொறுத்தவரை சோனி என்டபுள்யுஸட்-எ844 30எப்பிஎஸ் பிரேமையும் அதுபோல் 720X480 க்யுவிஜிஎ ரிசலூசனையும் கொண்டுள்ளது. இதன் ப்ளேபேக் நார்மல் மோடில் இருக்கும் போது தொடர்ச்சியாக ப்ளேபேக்கை இயக்க முடியாது. இது ஒரு சிறிய குறையாகும்.

சோனி என்டபுள்யுஸட்-எ844ல் ஸ்லைட் ஷோவும் உண்டு. இதன் மெமரி அளவும் அதிகம். மேலும் இது எம்பி3, எம்பி4 மற்றும் எஎசி-எல்சி போன்ற மீயூசிக் பார்மட்டுகளை சப்போர்ட் செய்கிறது. அதுபோல் ஜேபிஇஜி பைல்களையும் சப்போர்ட் செய்கிறது.

பொதுவாக சோனியின் தயாரிப்புகளுக்கு உலக அளவில் சிறந்த வரவேற்பு உண்டு. அதே போல் தரத்திலும் சோனி எப்போதும் தனித்துவத்துடன் இருக்கும். இந்த சோனி என்டபுள்யுஸட்-எ844க்கு உத்திரவாதம் கொடுக்கலாம். அந்த அளவிற்கு இது மிகத் தரமாக இருக்கிறது. இதன் விலையைப் பார்த்தால் வரியோடு சேரத்து ரூ.6900 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X