துல்லியமான இசையை வழங்கும் புதிய ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர்

Posted By: Staff

துல்லியமான இசையை வழங்கும் புதிய ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர்
பாரடைம் வழங்கும் 100 சிடி சினிமா ஸ்பீக்கர்கள் விரைவில் நமது அறைகளை அலங்கரிக்கவிருக்கின்றன. இந்த ஸ்பீக்கர்கள் நமது ஒரு திரையரங்கு போல் மாற்றிவிடும். அந்த அளவிற்கு அதன் இசை அதிரடியாக இருக்கும். 100 சிடி சினிமா ஸ்பீக்கர்கள் சாதாரண ஹோம் தியேட்டர்கள் போன்று இருக்காது.

இந்த 100 சிடி சினிமா ஸ்பீக்கர்களோடு சேர்த்து மேலும் இரண்டு 200 சிடி சினிமா ஸ்பீக்கர்கள் மற்றும் 400 சிடி சினிமா ஸ்பீக்கர்கள் என்ற ஹோம் தியேட்டர்களை பாரடைம் அறிமுகப்படுத்துகிறது.

100 சிடி சினிமா ஸ்பீக்கர்கள் பற்றி பேசும் போது இதன் இசை மிகவும் அபாரமாக இருக்கும் என்று சொல்லலாம். நமது வீட்டில் இந்த ஸ்பீக்கர்கல் இருந்தால் மிக துல்லியமான மனதை வருடும் இசையைக் கேட்கலாம். மேலும் இந்த ஸ்பீக்கர்களை நாம் விரும்பும் இடங்களில் வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக சுவர்களில் அல்லது புத்தக அலமாரிகளில் இதன் துணைஊபரோடு வைத்துக் கொள்ளலாம்.

100 சிடி சினிமா ஸ்பீக்கர்கள் கிரிஸ்டல் க்ளாரிட்டி ஒலியையும் ப்ளூ-ரே ஆடியோவையும் வழங்குகிறது. இதில் ஒரு சிறிய ஒலியைக் கூட மிகத் துல்லியமாக கேட்க முடியும்.

100 சிடி சினிமா ஸ்பீக்கர்கள் எஸ்-பால் தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளது. அது இரைச்சலைக் குறைத்து மிகத் தெளிவான துல்லியமான ஒலியை வழங்குகிறது. அதுபோல் இது பெரோ-ப்ளூய்ட் கூலிங் வசதியையும் வழங்குகிறது. அதனால் உயர்ந்த மின் அழுத்தம் ஏற்படும் போது இந்த ஸ்பீக்கர்கள் அதனால் பாதிப்பு அடையாது.

100 சிடி சினிமா ஸ்பீக்கர்கள் வயர் மெஷ் ட்வீட்டர் கார்ட் மற்றும் வேவ் கைட் போன்ற மிக முக்கய தொழில் நுட்பங்களைக் கொண்டுள்ளது. இந்த தொழில் நுட்பங்கள் இந்த ஸ்பிக்கர்களின் தரமான ஒலி அமைப்பிற்கு உத்திரவாதம் அளிக்கிறது. இதன் ஆம்ப்ளிபயர் 2 இன்புட் லைண் கொண்டு 300 வாட்ஸ் கொண்டிருக்கிறது.

100 சிடி சினிமா ஸ்பீக்கர்கள் கண்டிப்பாக நமது இல்லங்களை ஒரு திரையரங்கமாக மாற்றிவிடும் என்பதில் ஐயமில்லை. இதன் விலை ரூ.50,000 ஆகும். இதன் விலையை விட இதன் மதிப்பு அதிகம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot