ஜிம்முக்கு போறவங்களுக்கு வசதியாக ஓர் ஹெட்போன்

குறிப்பாக நாம் நமது உடலைத் தகுதியடன் நல்ல நிலையில் வைத்துக் கொள்வதற்காக உடற்பயிற்சி செய்யும் நேரத்தில் கூடி இந்த தொழில் நுட்பம் நமக்கு வருகிறது. அதாவது நியு பேலன்ஸ் நிறுவனம் நியு பேலன்ஸ் என்பி639 பிட்னஸ் என்ற ஹெட்போனை அறிமுகப்படுத்துகிறது. இதை உடற்பயிற்சி செய்யும் போது அணிந்துகொள்ள வசதியாக இருக்கும்.
நியு பேலன்ஸ் என்பி639 பிட்னஸ் ஹெட்போன் ஜிம்மை பயன்படுத்துவோருக்கு வரப்பிரசாதமாக இருக்கும். குறிப்பாக நமது உடற்பயிற்சியை முடிக்கும் வரை இந்த ஹெட்போனை நமது காதுகளில் மாட்டிக்கொள்ளலாம். இது எந்தவித தொந்தரவையும் தராது. மேலும் நமது காதும் வலிக்காத அளவிற்கு இந்த ஹெட்போன் மிக மென்மையாக உள்ளது. இதில் ஸ்வீட் ப்ரூப் என்ற வசதி உள்ளதால் இதன் செயல்பாடு மிக அருமையாக இருக்கும்.
நியு பேலன்ஸ் என்பி639 பிட்னஸ் ஹெட்போன் க்ரோனோக்ராப் வசதியுடன் வருகிறது. அதனால் இது ஸ்டாப் வாட்ச் வேலையையும் செய்யும். மேலும் இது நமது இதயத் துடிப்புக்கான் மானிட்டர் கொண்டிருப்பதால் இந்த ஹெட்போனைத் தொடும்போது நமது இதயத் துடிப்பை இதன் மானிட்டரில் தெளிவாகக் காட்டும்.
மேலும் இதில் இருக்கும் ஒலி தொழில் நுட்பம் மூலம் நமது இதயத் துடிப்பு நாம் பயணம் செய்திருக்கும் கிலோ மீட்டர்கள் மற்றும் உடற்பயிற்சி மூலம் எவ்வளவு கலோரிகள் நமது உடலில் எரிந்திருக்கின்றன போன்ற எல்லா தகவல்களையும் இது வழங்கும்.
நியு பேலன்ஸ் என்பி639 பிட்னஸ் ஹெட்போன் ஹார்ட்பால் என்ற நவீன க்ராபிக்ஸ் தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்கிறது. இந்த சாப்ட்வேர் பெர்பார்மன்ஸ் டேட்டைவை வழங்குகிறது. மேலும் இது காதுக்கு மிக அடக்கமாக இருக்கிறது.
நியு பேலன்ஸ் என்பி639 பிட்னஸ் ஹெட்போனின் விலை ரூ.4,000 ஆகும். குறிப்பாக ஜிம் பிரியர்களுக்கு இது மிக உதவியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications