Home
Music

12 மணிநேர பேக்கப்புடன் மார்க்கெட்டுக்கு வரும் மினி ஸ்பீக்கர்கள்

By Super
12 மணிநேர பேக்கப்புடன் மார்க்கெட்டுக்கு வரும் மினி ஸ்பீக்கர்கள்
ஸ்மார்ட்போன்களும் கையடக்க டேப்லட்டுகளும் வந்தபின் இந்த உலகம் ஒரு சொர்க்கமாக மாறியிருக்கிறது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இந்த புதிய தொழில் நுட்பங்கள் இந்த உலகை நன்றாக மெருகேற்றியிருக்கிறது. அதனால் தான் ஸ்பீக்கர்களும் புதிய தொழில் நுட்பத்திற்குள் நுழைய வேண்டிய கட்டாயம் வந்துள்ளது. அந்த வரிசையில் இப்போது எக்ஸ்-மினி II ஸ்பீக்கர்கள் சந்தைக்கு விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றன. அவை தரமான இசையை வலிமையான ஒலி அமைப்புடன் வழங்குகின்றன.

இந்த எக்ஸ்-மினி II ஸ்பீக்கர்கள் பல சிறப்பம்சங்களுடன் வருகின்றன. குறிப்பாக 2 மணி நேரத்திற்குள் இந்த ஸ்பீக்கர்களை முழுமையாக ரீஜார்ஜ் செய்ய முடியும். மேலும் இதிலுள்ள இண்டிகேட்டர் மூலம் இந்த ஸ்பீக்கர்கள் இயக்கத்தில் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள முடியும். இந்த ஸ்பீக்கர்கள் 340எம்எஹெர்ட்ஸ் கொண்டு வருவதால் இது நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கும்.

அதாவது 12 மணி நேரமா தாங்கும் சக்தி கொண்டது. மற்ற ஸ்பீக்கர்களில் இதைப் பார்க்க முடியாது. ரீஜாராஜ் செய்வதற்காக ஒரு சிறிய யுஎஸ்பி சாக்கெட்டும் கொடுக்கப்படுகிறது. இந்த யுஎஸ்பி சாக்கெட் மூலம் இந்த ஸ்பீக்கர்கள் மின்சாரத்தையும் அதே நேரத்தில் ஆடியோ இன்புட்டையும் பெறுகின்றன. மேலும் இந்த ஸ்பீக்கர்கள் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக்கும் கொண்டுள்ளன.

எக்ஸ்-மினி II ஸ்பீக்கர்களின் டிசைனைப் பார்க்கும் போது அவை காடுகளின் பச்சை நிறத்தைக் கொண்டு இயற்கைத் தோற்றத்துடன் காட்சி அளிக்கிறது. இது வட்ட வடிவ பந்து போல் இருக்கிறது. இதில் 3 இன்ச் கேபிளும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக்கும் உள்ளன. இதன் மேல் மூடியைத் திறந்தால் இதன் பேஸ் இசை நம்மை மெய்மறக்கச் செய்துவிடும்.

எக்ஸ்-மினி II ஸ்பீக்கர்கள் காதில் பிரச்சினை இருப்பவர்களும் இசை கேட்கும் அளவில் இருக்கிறது. அதாவது ஸ்மார்ட் போனிலிருந்து பாடல் உயர்ந்த ப்ரீக்வன்சியில் வந்தாலும் இந்த ஸ்பீக்கர்கள் அவர்களுக்கு குறைந்த ப்ரீக்வன்சியில் வழங்கும். குறிப்பாக சிறிய ஸ்பீக்கர்களை விரும்புவோர் இந்த ஸ்பீக்கர்களைத் தேர்ந்தெடுக்கலாம். குறிப்பாக இதன் பேஸ் இசை மிக அபாரமாக இருக்கும்.

எக்ஸ்-மினி II ஸ்பீக்கர்கள் 100எச்ஸட் முதல் 20கேஹெர்ட்ஸ் ப்ரீக்வன்சியைக் கொண்டிருக்கின்றன. மேலும் இதன் பேட்டரியின் திறன் 400எம்எஎச் ஆகும். 5 வாட்ஸ் ஓல்டேஜ் இதன் பேட்டரிக்கு அளிக்கப்படுகிறது. இந்த ல்பீக்கர்களின் மொத்த எடையே 83 கிராம்களாகும். இதன் விலை ரூ.1700 மட்டுமே.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X