புதிய தொழில்நுட்பத்துடன் வரும் சென்ஹைசர் ஹெட்போன்கள்

By Super
|
புதிய தொழில்நுட்பத்துடன் வரும் சென்ஹைசர் ஹெட்போன்கள்
சென்ஹைசர் ஆடியோ டிவைஸ்கள் தங்களது சிறந்த தொழில்நுட்பத்தின் மூலம் உலகத்தையே தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றன. குறிப்பாக உலக ஆடியோ சந்தையில் மிக முக்கிய இடத்தை சென்ஹைசர் பிடித்திருக்கிறது. சென்ஹைசரின் ஒவ்வொரு படைப்பும் சிறந்த செயல் திறனை கொண்டிருக்கும்.

சென்ஹைசரின் எச்டி சீரிஸ் ஹெட்போன்களுக்கு எப்போதும் தேவை அதிகமாக இருக்கும். அந்த வகையில் அவர்களின் எச்டி 800 மிக பிரபலமாக உள்ளது. இதற்கு முன் வந்த எச்டி-650 குறைந்த விலையில் வந்து வாடிக்கையாளர்களின் மனதைக் கவர்ந்தது.

ஆனால் எச்டி-800 மற்ற பழைய வரவுகளையெல்லாம் பின்னுக்கு தள்ளும் அளவிற்கு மிகுந்த திறனுடன் வருகிறது. எச்டி-650ல் உள்ள குறை என்னவென்றால் அதன் ஒலி காதின் சவ்வை கிழிக்கும் அளவுக்கு இருந்து. ஆனால் புதிய எச்டி-800ல் இந்த குறைபாடுகள் இல்லை.

எச்டி-800ன் சிறப்பு அதன் வசதியாகும். அதன் ஹெட்டசெட்களை எவ்வளவு மணி நேரம் பயன்படுத்தினாலும் அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இவை அனைவருக்கும் பொருந்துவதாக அமையும். இந்த ஹெட்போனின் காதில் வைக்கும் பகுதி மைக்ரோ பைபரால் செய்யப்பட்டது.

மேலும் இது வெல்வெட்டால் மூடி வைக்கப்பட்டுள்ளதால் காதிற்கு இதமாக இருக்கும். அதே போல் இந்த ஹெட்போன் அளவிலும் பெரியதாக உள்ளது. இதன் இந்த பெரிய அளவு இதற்கு சிறப்பைக் கொடுக்கிறது.

இதன் ட்ரைவர்கள் அனைத்தும் ப்ளாஸ்டிக் பொருள்களால் ஆனது. மேலும் இவற்றை எளிதாக மாற்ற முடியும். மேலும் இதன் ஒய் கேபிள்களை வடிவமைப்பதில் இதன் தயாரிப்பாளர்கள் அதிகம் மெனக்கிட்டிருக்கிறார்கள். மேலும் ஆக்ஸிஜன் ப்ரீ துணியும் கொண்டிருக்கிறது. மேலும் இதில் வெள்ளித் தகடும் உள்ளது. மேலும் இதையும் எளிதாக மாற்ற முடியும் மேலும் கனக்டர் வசதிகளும் உள்ளன.

இவற்றை ஸ்டூடியோ மானிட்டர்களில் பொருத்தும் போது இதன் செயல்பாடு மிக அம்சமாக இருக்கும். அதனால் 3.5 எம்எம் கேபிளுக்குப் பதிலாக 6.3 எம்எம் கேபிள் பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதில் 6.3 எம்எம் கேபிள் வசதி இல்லை. ஆனால் ஸ்டூடியோ வேலைகளுக்கு இது பொருத்தமாக இருக்கும். இதன் விலை இந்தியாவில் ரூ.80,000 ஆகும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X