எச்டி தொழில்நுட்பத்துடன் கம்ப்யூட்டர் ஸ்பீக்கர்: வோல்ப்சன் அறிமுகம்

By Super
|
எச்டி தொழில்நுட்பத்துடன் கம்ப்யூட்டர் ஸ்பீக்கர்: வோல்ப்சன் அறிமுகம்
உல்ப்சன் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் தற்போது டபுள்யுஎம்8861 மற்றும் டபுள்யுஎம்8862 என்ற இரண்டு புதிய எச்டி இசை பேழைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த இசைப் பேழைகளை லேப்டாப் மற்றும் மேசைக் கனிணிகளில் இணைக்கலாம். இதிலிருந்து வரும் இசை 5 மடங்கு அதிகமாகும்.

ஏனெனில் இது 2விஆர்எம்எஸ் கேப் லெஸ் அவுட்புட் மற்றும் 105டிபி டிஎசி சிக்னல் டு ரேசியோவைக் கொண்டுள்ளது. இந்த இரண்டு இசைப் பேழைகளும் உல்ப்சனின் க்ளாரிட்டி ஆடியோ ஸ்டூடியோ சாப்ட்வேரைக் கொண்டு வருகிறது. இந்த சாப்ட்வேர் இதை பேட்டரியின் மின் திறனை கூடுதலாக அரைமணி நேரம் தாங்கும் சக்தியை வழங்குகிறது.

டபுள்யுஎம்8861 மற்றும் டபுள்யுஎம்8862 இசைப் பேழைகள் பிசிபி போர்டில் 45% ரிடக்சனையும் அதுபோல் லேப்டாப்பிலுள்ள ஆடியோ பிசிபி பிஎம்பில் 56% ரிடக்சனையும் கொண்டு வருகிறது. இந்த பேழைகளின் ஒலி அமைப்பின் தரத்தை உயர்த்த வெளிப்புற டிவைஸ்கள் தேவை இல்லை. மேலும் இது 100% சப்போர்ட்டை ஹெட்போனுக்கு வழங்குகிறது.

டபுள்யுஎம்8861 மற்றும் டபுள்யுஎம்8862 இசைப் பேழைகளில் ஏராளமான வசதிகள் உள்ளன. அதாவது இவை உல்ப்சன் சைலன்ட்ஸ்விட்ச் வசதியைக் கொண்டுள்ளது. அதனால் இதிலருந்து வரும் இசை மிகத் தெளிவாகவும் அதே நேரத்தில் தரமாகவும் இருக்கும்.

டபுள்யுஎம்8861 மற்றும் டபுள்யுஎம்8862 இசைப் பேழைகளில் டைனமிக் ரேன்ஜ் கண்ட்ரோலர்கள் உள்ளன. அதுபோல் இதிலுள்ள ப்ரீக்வன்சியும் மிக அருமையாக இருக்கும். அதனால் இவற்றிலிருந்து இசை மிக சத்தமாக வரும்போது இதன் ஹோஸ்ட் ப்ராசஸருக்கு எந்த வித ஆடியோ சிக்னல் ப்ராசஸிங் சுமையையும் தராது.

அதன் விளைவாக நாம் நமது லேப்டாப்பில் ஹைபை ஆடியோவை கேட்கலாம். அதனால் இசையமைப்பாளர்கள் முதல் இசையை ரசிக்கக்கூடிய சாதாரண ரசிகன் வரை இதிலிருந்து வரும் இசையை மிக அழகாக அனுபவிக்கலாம்.

டபுள்யுஎம்8861 மற்றும் டபுள்யுஎம்8862 இசைப் பேழைகள் பல பிரிவுகளில் வருகிறது. இந்த இரண்டு இசைப் பேழைகளிலும் நவீன ஹெட்செட் டிடக்சன் வசதி உள்ளதால் இவற்றில் ஹெட்செட்டுகளை இணைக்கும் போது இது விரைவாக சோதனை செய்யும். பின் இந்த டிடக்சன் வசதி இணைப்பை சரியாக கண்டறிந்து அதில் ஒருசில மாற்றங்களைச் செய்து தரமான இசையை வழங்கும்.

டபுள்யுஎம்8861 துணை மாஸ்டர் 12எஸ் ஆடியோ மற்றும் 12சி/எஸ்பிஐ கண்ட்ரோல் இன்டர்பேஸ் கொண்டு வருகிறது. இது உல்ப்சன் டபுள்யுஎம்0010 டிஎஸ்பி, மற்ற ஆடியோ டிஎஸ்பிஎஸ் மற்றும் டிஜிட்டல் இன்புட் ஆம்பிளிபயர்கள் மற்றும் டிஎசிகள் ஆகியவற்றை மிக நேர்த்தியாக கட்டுப்படுத்துகின்றன.

டபுள்யுஎம்8861 மற்றும் டபுள்யுஎம்8862 இசைப் பேழைகள் வரும் டிசம்பர் மாதம் சந்தைக்கு வரும் என்று தெரிகிறது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படுவில்லை.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X