Home
Music

2 வருட உத்திரவாதத்துடன் வரும் ட்ரான்சென்டின் புதிய இசைப் பேழை

By Super
2 வருட உத்திரவாதத்துடன் வரும் ட்ரான்சென்டின் புதிய இசைப் பேழை
பன்னாட்டு நிறுவனமான ட்ரான்சென்ட் இன்பர்மேசன் இன்க் மல்டி மீடியா பொருள்களை உற்பத்தி செய்வதில் முன்னனியில் உள்ளது. இப்போது அந்நிறுவனம் புதிய ட்ரான்சென்ட் எம்பி300 கம்பேக்ட் மியூசிக் ப்ளேயரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த புதிய இசைப் பேழை இசைப் பிரியர்களின் தாகத்தைத் தணிக்கும் என்று ட்ரான்சென்ட் நம்புகிறது.

ட்ரான்சென்ட் எம்பி300 கம்பேக்ட் மியூசிக் ப்ளேயர் அதிசயிக்கத்தக்க வகையில் ஏரானமான சிறப்பு அம்சங்களுடன் வருகிறது. இதன் முதல் சிறப்பு என்று பார்த்தால் இதன் நீண்ட ஆயுள் கொண்ட பேட்டரி ஆகும்.

அதாவது இந்த இசைப் பேழையை தொடர்ந்து 15 மணி நேரம் உபயோகித்தாலும் அதைத் தாங்கக்கூடிய சக்தியை இதன் பேட்டரி பெற்றிருக்கிறது. ஏனெனில் இது குறைந்த எடை கொண்ட லித்தியம் பாலிமர் பேட்டரி ஆகும்.

ட்ரான்சென்ட் எம்பி300 கம்பேக்ட் மியூசிக் ப்ளேயர் மிகவும் எடை குறைந்து இருப்பாதால் இதை எங்கு வேண்டுமானாலும் மிக எளிதாக எடுத்துச் செல்லலாம். ஏனெனில் இதன் எடை 15 கிராம் மட்டுமே. மேலும் இந்த இசைப் பேழை பார்ப்பதற்கு மிக அட்டகாசமாகவும் உள்ளது.

ட்ரான்சென்ட் எம்பி300 கம்பேக்ட் மியூசிக் ப்ளேயரை ஒரு கையாலே இயக்க முடியும். மேலும் பாடல்களைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு முறையும் இதன் டிஸ்ப்ளேயைப் பார்க்கத் தேவையில்லை. நாம் வேலையில் இருக்கும் போது பாடல்களுக்கான் கட்டுப்பாட்டு பட்டனைத் தட்டிவிட்டால் போதும் இது பாட ஆரம்பித்துவிடும்.

நமது வேலையும் கெடாமல் இருக்கும். அதே நேரத்தில் தொடர்ச்சியாகவும் பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். மேலும் இந்த இசைப் பேழையில் ஹெட்போனையும் இணைத்துவிட்டால் அது நம்மைத் தனியான ஒரு இன்ப உலகத்திற்கு அழைத்துச் செல்லும்.

ட்ரான்சென்ட் எம்பி300 கம்பேக்ட் மியூசிக் ப்ளேயர் 4ஜிபி மற்று 8ஜிபி என்று 2 பிரிவாக வருகிறது. மேலும் இந்த இசைப் பேழைக்கு 2 வருட உத்திரவாதத்தை ட்ரான்சென்ட் வழங்குகிறது. அதுபோல் இதன் விலையும் மிகவும் நியாயமானதாக உள்ளது.

அதாவது 4ஜிபி இசைப் பேழை ரூ.2,100க்கும் 8ஜிபி இசைப் பேழை ரூ.2,600க்கும் விற்கப்படுகிறது. கண்டிப்பாக ட்ரான்சென்ட் எம்பி300 கம்பேக்ட் மியூசிக் ப்ளேயர் இசைப் பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X