டாக்கிங் செய்யும் வசதியுடன் புதிய ஐபோன் ஸ்பீக்கர்

விசோ 1 உருளை வடிவத்தில் இருக்கிறது. இதை நமது ஐபோட் மற்றும் ஐபோன்களில் இணைத்தபின் அருமையான இசையைக் கேட்கலாம். முதலில் நமது ஐபோட் அல்லது ஐபோனை இந்த இசைப் பேழையோடு இணைக்க வேண்டும். பின் பாடல் அட்டவணையிலிருந்து பாடலைத் தேர்ந்தெடுத்து இயக்கினால் நாம் விரும்பிய பாடலை பிரமாதமாக கேட்கலாம்.
இதில் ப்ளூடூத் வசதியும் உண்டு. அதனால் இந்த டிஜிட்டல் இசைப் பேழையோடு எந்த ஒரு ப்ளூடூத் வசதி கொண்ட டிவைஸையும் மிக எளிதாக இணைக்க முடியும். மேலும் இதை ஆன்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் இயங்கு தளங்களில் இயங்கும் கெட்ஜெட்டுகளிலும் இணைக்க முடியும்.
விசோ 1ல் இருக்கும் தொழில் நுட்பங்களைப் பார்த்தால் அது நவீன என்டிஎவின் நேரடியான டிஜிட்டல் தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளது. அதனால் இதில் உள்ள பேஸ் இசை மிக அருமையாக இருக்கும். அதுபோல் இதில் சேமித்த பாடல்களை நாம் கேட்கும் போது டிஜிட்டல் வசதி மாறாமல் இருக்கும். மேலும் இது சோனிக் செயல் திறனைக் கொண்டுள்ளது.
இந்த விசோ ஆப்டிக்கல் டிஜிட்டல் இன்புட்டை ஏற்றுக் கொள்ளும். மேலும் சவுண்ட் அவுட்புட்டுகளை அகன்ற ப்ரிக்வன்சிக்கு பை-ஆம்பிளிபை செய்யும். மேலும் இந்த டிவைஸ் சுற்றும் வசதி கொண்டது. இதை 90 டிகிரிக்கு சுற்ற முடியும்.
அதனால் இதை குறுக்கு நெடுக்காகவோ அல்லது படுக்கை நிலையிலோ இதை வைக்க முடியும். மேலும் இதில் 30 பின் கனெக்டர் உள்ளதால் இதில் ஐபோட் ஜார்ஜ் செய்வதற்கு அனுமதிக்கிறது. மேலும் இந்த சிஸ்டத்தை டிவியிலும் இணைக்க முடியும். மேலும் இதன் மூலம் ஐபோன் வழியாக வீடியோவைப் பார்க்க முடியும்.
விசோ 1 யுஎஸ்பி போர்ட் கொண்டுள்ளது. இந்த போர்ட் மூலம் நமது சாப்ட்வேர்களை நாம் அப்க்ரேட் செய்ய முடியும். மேலும் இதை இயக்க ஐஆர் ரிமோட் கண்ட்ரேலும் உள்ளது. இந்த டிவைஸின் விலை ரூ.34,000 ஆகும்.


Click it and Unblock the Notifications