Home
Music

யமஹாவின் புதிய அல்ட்ரா ஸ்லிம் ஸ்பீக்கர் சிஸ்டம்

By Super
யமஹாவின் புதிய அல்ட்ரா ஸ்லிம் ஸ்பீக்கர் சிஸ்டம்
உலக அளவில் யமஹாவின் தயாரிப்புகளுக்கு ஒரு நல்ல பெயர் உள்ளது. அதே நேரத்தில் அவற்றின் தயாரிப்புகளுக்கும் நல்ல வரவேற்பும் உள்ளது. குறிப்பாக ஆட்டோ மொபைல் பொருள்கள் மற்றும் ஆடியோ பொருள்கள் தயாரிப்பில் ஒரு ஈடு இணையில்லாத இடத்தை யமஹா பெற்றுள்ளது.

தற்போது யமஹா நிறுவனம் புதிய யமஹா ஒய்எச்டி-எஸ்401 என்ற சவுண்ட் பார் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த ஸ்பீக்கர் ஒரு இன்டக்ரேட்டட் துணை ஊபர் ரிசிவருடன் வருகிறது. இந்த ஸ்பீக்கர் பார்ப்பதற்கு மிக அட்டகாசமாக உள்ளது. இது கருப்பு நிறத்துடன் ரிமோட் கட்டுப்பாட்டு வசதியுடன் வருகிறது. இந்த ஸ்பீக்கர் சிஸ்டம் 7.1 சரவுண்ட் சவுண்ட் கொண்டு வருவதால் இதில் இசை கேட்பதற்கு புதிய அனுபவத்தை தரும்.

யமஹா ஒய்எச்டி-எஸ்401 ஸ்பீக்கர் ஒரு அல்ட்ரா ஸ்லிம் சவுண்ட் பார் ஆகும். இது 50 வாட்ஸ் மின்திறனுடன் வருகிறது. இதை நாம் ஹோம் தியேட்டருக்கு பயன்படுத்தலாம். மேலும் இதில் உரையாடல்கள் மற்றும் வார்த்தைகள் மிகத் தெளிவாகவும், துல்லியமாகவும் இருக்கும்.

மேலும், இதை பொருத்தும் போது இதிலுள்ள ஸ்டான்டுகளின் உயரத்தை கூட்டியோ அல்லது குறைத்தோ வைத்துக் கொள்ளலாம். இதில் உள்ள ஸ்டான்டுகளை அகற்றி இந்த ஸ்பீக்கரை நமது சுவரில்கூட பொருத்திக் கொள்ளலாம். இதன் வெர்ச்சுவல் 7.1 சரவுண்ட் சவுண்ட யமஹாவின் அதிகாரப்பூர்வமான ஏர் சரவுண்ட் எக்ஸ்ட்ரீம் தொழில் நுட்பத்துடன் வருகிறது. இந்த தொழில் நுட்பம் இந்த ஸ்பீக்கருக்கு மிக சூப்பரான தரத்தை வழங்குகிறது.

யமஹா ஒய்எச்டி-எஸ்401 ஸ்பீக்கர் 6 சரவுண்ட் மோடுகளுடன் வருகிறது. அதாவது இது திரைப்படம், இசை, விளையாட்டு, வீடியோ கேம்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் ஆகிய மோடுகளில் வருகிறது. அதனால் அந்த மோடுகளுக்கு ஏற்ப இந்த டிவைஸ் தரமான ஒலி அமைப்பை வழங்கும்.

மேலும் இது க்ளியர் வாய்ஸ் வசதியைக் கொண்டிருப்பதால் இதில் உரையாடல்கள் மற்றும் வார்த்தைகள் மிகத் தெளிவாகக் கேட்கும். மேலும் இது ஓவல் சென்டர் சேனல் ஸ்பீக்கர் வசதி கொண்டுள்ளதால் இதில் இயற்கையான இசையைக் கேட்கலாம். அதோடு இது ஹெட்போன் ஜாக்கையும் வழங்குகிறது.

யமஹா ஒய்எச்டி-எஸ்401 ஸ்பீக்கர் இன்பில்ட் எப்எம் ட்யூனர் மற்றும் டிஜிட்டல் யுஎஸ்பி இணைப்பைக் கொண்டுள்ளது. அதுபோல் இது ஆடியோ ரிட்டர்ன் சேனல் மற்றும் 3டி வீடியோ வசதியையும் கொண்டுள்ளது. இதன் எச்டிஎம்ஐ 3இன்1 போர்ட் 1080பி ரிசலூசனை சப்போர்ட் செய்கிறது. இந்த டிவைஸ் மிக சூப்பரான ஒலி அமைப்பையும் மிகத் தெளிவான இசையையும் வழங்கும் என்று யமஹா உறுதி அளிக்கிறது.

யமஹா ஒய்எச்டி-எஸ்401 ஸ்பீக்கரின் விலை ரூ.35,000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X