புதிய தொழில் நுட்பத்துடன் இசட்டிஇ எக்ஸ்-501 ஸ்மார்ட்போன்!

நிறைய பட்ஜெட் மொபைல்களை வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் கொடுத்து இருக்கிறது இசட்டிஇ நிறுவனம். ஆனால் இப்பொழுது ஸ்மார்ட்போன் படைப்பிலும் தனது அதிரடி பெர்ஃபார்மன்ஸை அதிகப்படுத்தி கொண்ட வருகிறது இசட்டிஇ.
எக்ஸ்-501 என்ற புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் நவீன தொழில் நுட்பங்களை கொண்டதாக இருக்கும். 3.5 இஞ்ச் திரையின் மூலம், 320 X 480 மெகா பிக்ஸல் துல்லியத்தினை வழங்கும். எச்விஜிஏ மல்டி தொடுதிரை வசதியினையும் கொண்டுள்ளது. இதில் 3.15 மெகா பிக்ஸல் கேமரா உள்ளதால், 2048 X 1536 பிக்ஸல் துல்லியத்தில் தெளிவான புகைப்படத்தினையும், வீடியோவினையும் தரும்.
ஆன்ட்ராய்டு வி2.3.5 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் இந்த இசட்டிஇ எக்ஸ்-501 ஸ்மார்ட்போன் 115 கிராம் எடை கொண்டது. இதன் ஓஎஸ் எளிதாக இயங்க கியூவள்காம் 800 மெகாஹெர்ட்ஸ் பிராசஸர் ஏதுவாக இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போனில் 0.3 மெகா பிக்ஸல் கொண்ட முகப்பு கேமராவும் உள்ளது. இதன் எக்ஸ்டர்னல் மெமரி ஸ்லாட் 2ஜிபி வரை சப்போர்ட் செய்கிறது. 32 ஜிபி வரை இதன் மெமரி வசதியை விரிவுபடுத்தி கொள்ள முடியும்.
மல்டி ஃபார்மெட் பிளேயர் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 3ஜி தொழில் நுட்பத்திற்கும் சப்போர்ட் செய்கிறது. 3ஜி நெட்வொர்க் போன்ற உயர்ந்த தொழில் நுட்ப வசதி எந்தவித தடையும் இல்லாமல் கிடைக்க இதன் 1,500 எம்ஏஎச் பேட்டரி பெரிதும் துணை புரிகிறது. இதனால் சிறந்த டாக் டைம் மற்றும் ஸ்டான்-பை டைமையும் பெறலாம்.


Click it and Unblock the Notifications