Home
Mobile

யூ டியூப் வசதியுடன் புதிய ஸ்மார்ட்போன்: இசட்டிஇ அறிமுகம்

By Super
யூ டியூப் வசதியுடன் புதிய ஸ்மார்ட்போன்: இசட்டிஇ அறிமுகம்
ஒவ்வொரு முறை புதிய மொபைல்களைக் கொடுக்கும் பொழுதும் வாடிக்கையாளர்களிடம் இருந்து புதிய அனுபவத்தையும் சேர்த்து பெறுகிறது இசட்டிஇ நிறுவனம். இதனால் பல வகையில் யோசித்து, பல சிறப்பான மொபைல்களை கொடுக்கின்றது.

வார்ப் என்ற பெயரில் வந்துள்ள இந்த மொபைல் அனைவரும் விரும்பும் 2.3 ஆன்ட்ராய்ட் வெர்ஷன் இயங்குதளத்தில் இயங்குகிறது. எதையும் முழுமையாகக் காண இதன் 4.3 இஞ்ச் அகன்ற திரை உதவுகிறது.

எந்த மொபைலை வாங்கினாலும் வாடிக்கையாளர்களின் பெரிய கவலையே அதன் கேமராதான். தெளிவான புகைப்படத்தை அது கொடுக்குமா என்பது தான். இசட்இடி வார்ப் மொபைலை பொருத்த வரையில் இந்த கவலையே தேவையில்லை.

ஏனென்றால் இதில் 5 மெகா பிக்ஸல் கேமரா இருக்கிறது என்கிற போது எதற்காக கேமராவை பற்றி யோசிக்க வேண்டும். சில மொபைல்கள் கையாள்வதற்கு ஏதுவாக இருக்காது.

ஆனால் இந்த மொபைல் 140 கிராம் எடையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் கைக்கு கச்சிதமாக இருக்கும். இசட்இடி வார்ப் மொபைல், என்ன வசதி வேண்டும் என்று கேட்காமல், அனைத்து சவுகரியத்தையும் கொடுக்கிறது.
டிஜிட்டல் சூம், ஜியோ டேக்கிங், வீடியோ ரெக்கார்டிங் போன்ற வசதியினையும் பெற முடியும்.

இது மியூசிக் ப்ளேயர், கேம்ஸ், யூடியூப் ப்ளேயர் போன்ற விஷயங்களை வாரிக் கொடுப்பதால், இது ஒரு மல்டி மீடியா மந்திரம் கொண்ட மொபைல் என்று தாராளமாகக் கூறலாம்.

அதிக தகவல்களை ஸ்டோர் செய்ய வேண்டுமா? இதன் மைக்ரோஎஸ்டி கார்ட்ஸ் 4ஜிபி மெமரிக்கு சப்போர்ட் செய்கிறது. இந்த வசதியினை தகவல்கள் சேகரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதில் உள்ள 1,600 எம்ஏச் பேட்டரி மூலம் 7.5 மணி நேரம் டாக் டைம் வசதியினையும், 270 மணி நேரம் ஸ்மான்ட்-பை டைம் வசதியினையும் அளிக்கிறது.

எக்ஸலன்ட் ஸ்பீட் கொண்ட புளூடூத் மற்றும் வைபையின் நெட் வசதியினை பெற முடியும். இந்த மொபைல் இந்திய சந்தையில் ரூ.12,000 விலையை ஒட்டி வெளிவரும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X