Home
Mobile

ரூ.17,000 விலை.. உலகின் முதல் ரியல்டைம் 3D போன்.. 2D வீடியோவை கூட 3D-யாக பார்க்கலாமா? ZTE மாஸ்.. என்ன மாடல்?

ZTE நிறுவனம் யாரும் எதிர்பார்த்திடாத நேரத்தில் புதிதாக 3டி ஸ்மார்ட்போன் சாதனத்தை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை நிறுவனம் ZTE வோயேஜ் 3D (ZTE Voyage 3D) என்ற பெயருடன் வெளியிட்டுள்ளது. இந்த புதிய 3டி ஸ்மார்ட்போன் (3D Smartphone) இலவச 3டி கிளாஸ்சுடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ZTE வோயேஜ் 3D ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் என்ன? இதன் விலை என்ன? இதை எங்கிருந்து வாங்கலாம்? இதில் எப்படி 2டி மற்றும் 3டி தொழில்நுட்பம் செயல்படுகிறது என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம்.

ZTE நிறுவனம் அதனுடைய புதிய ZTE Voyage 3D மொபைல் ஃபோனை அட்டகாசமான அம்சத்துடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சமர்ட்போனின் சிறப்பம்சம் என்னவென்றால், இது உலகின் முதல் AI நிர்வாணக் கண் 3D மொபைல் போன் என்று ZTE நிறுவனம் கூறியுள்ளது. அதாவது வெறும் கண்கள் கொண்டே 3டி அனுபவத்தை பயனர்கள் அனுபவிக்க முடியும் என்பதே இதன் பொருளாகும்.

ரூ.17,000 விலை.. உலகின் முதல் ரியல்டைம் 3D போன்.. என்ன மாடல்?

உலகின் முதல் ரியல்டைம் 3D போன் ZTE வோயேஜ் 3D (World's First Realtime 3D Phone ZTE Voyage 3D):

இருப்பினும் நிறுவனம், இந்த ஸ்மார்ட்போனுடன் இலவசமாக 3டி அனுபவத்தை கூடுதலாக சிறப்படைய செய்யும் 3டி கிளாஸ் கருவியையும் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய ZTE Voyage 3D ஸ்மார்ட்போன் சாதனம் இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ZTE இன் முதல் மற்றும் இரண்டாம் தலைமுறை நுபியா பேட் 3D டேப்லெட் (Nubia Pad 3D Tablet) சதானத்திற்கு பிறகு சந்தைக்கு வருகிறது.

இது உள்ளமைக்கப்பட்ட "மைக்ரான்-லெவல்" மல்டிடைமென்ஷனல் ஐவியர் ஃப்ரீ மற்றும் AI கண் டிராக்கிங் அம்சத்தை இது கொண்டுள்ளது. இதன் மூலம், உங்கள் கண்கள் பார்க்கும் திசைகளில் எல்லாம் 3டி வியூ கிடைப்பதை இந்த அம்சம் உறுதி செய்கிறது. 60° பரந்த கோணத்துடன், பயனரின் கண்களைத் துல்லியமாகக் கண்காணிக்கும் திறன் இந்த அம்சத்திற்கு உண்டு. இதன் டிஸ்பிளே அல்காரிதம் சிறந்த ரியல்டைம் 3D காட்சி அனுபவத்தை (3D display state in real time) வழங்குகிறது.

இது சுயமாக உருவாக்கப்பட்ட AI 2D முதல் 3D ரியல்டைம் கன்வெர்ஷன் செயல்பாட்டை கொண்டுள்ளது. இது ஒரே கிளிக்கில் 3D பயன்முறைக்கு மாறுவதற்கு முக்கிய பயன்பாடுகளை ஆதரிக்கிறது. கூடுதலாக, ஸ்மார்ட்போனில் ஒரு பிரத்யேக பிஸிக்கல் பட்டன் பொருத்தப்பட்டுள்ளது. இது Migu Video ஆப்ஸ் மூலம் ஒரே கிளிக்கில் 2டி வீடியோவை 3D பார்வைக்கு மாற்றுகிறது.

ZTE வோயேஜ் 3D சிறப்பம்சம்:
- 6.58" இன்ச் 2408 ×1080 பிக்சல்கள் கொண்ட FHD+ LCD 3D டிஸ்ப்ளே
- லெண்டிகுலர் 3D டிஸ்ப்ளே தொழில்நுட்பம்
- AI ஹெட் டிராக்கிங்
- AI சிஸ்டம்-லெவல் 2D-3D ரியல்டைம் கன்வெர்ஷன்
- ஆக்டா கோர் யூனிசோக் T760 பிராசஸர்
- 6ஜிபி LPDDR4x ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ்
- டூயல் சிம் (நானோ + நானோ)
- MyOS 13 உடன் ஆண்ட்ராய்டு 13
- 50MP + 5MP கேமரா
- 5MP செல்பி கேமரா
- கைரேகை சென்சார்
- எடை: 190 கிராம்
- 5G SA/NSA, Dual 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz)
- புளூடூத் 5.0
- GPS/ GLONASS/ Beidou
- USB Type-C
- 33W சார்ஜிங்
- 4500mAh பேட்டரி

ZTE வோயேஜ் 3D விலை (ZTE Voyage 3D Price):
ZTE Voyage 3D ஸ்மார்ட்போனின் விலை பற்றி பேசுகையில், இது ஸ்டார் பிளாக் நிறத்தில் 1499 யுவான் என்ற விலையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 17,225 என்ற விலையை பெறுகிறது. இந்தியாவிற்கு இந்த ஸ்மார்ட்போன் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
ZTE Voyage 3D Smartphone With Realtime 2D to 3D Video Conversion Launched Check Price Now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X