நவீன வசதிகளுடன் வரும் புதிய இசட்டிஇ ஸ்மார்ட்போன்!

மலிவு விலை கொண்ட மொபைல்களையும், டியூவல் நெட்வொர்க் தொழில் நுட்பங்களையும் கொண்ட ஏராளமான மொபைல்களை கொடுத்த இசட்டிஇ நிறுவனம் தற்போது, புதிய வி-881 என்ற ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வி-881 ஸ்மார்ட்போன் அக்லேயா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. கூகுள் ஆன்ட்ராய்டு 2.3.5 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தையும், கியூவல்காம் ஸ்னாப்டிராகன் எம்எஸ்எம்-8255 சிபியூ பிராசஸரும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
3.8 இஞ்ச் டச் தொடுதிரை வசதியும் இதில் உள்ளதால் 480 X 800 பிக்ஸல் துல்லியத்தையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும். கியூவல்காம் அட்ரினோ 205 கிராஃபிக்ஸ் கன்ட்ரோலரும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
இந்த வி-881 ஸ்மார்டபோன் ஜிஎஸ்எம் 900/1,800 மெகாஹெர்ட்ஸ் செலுலார் நெட்வொர்க் வசதிக்கு இந்த வி-881 ஸ்மார்ட்போன் உதவுகிறது. ரிமூவபுல் லித்தியம்-அயான் பேட்டரியும் இதில் பொருத்தப்பட்டுள்ளதால் பேசுவதற்கு சிறந்த முறையில் ஒத்துழைக்கும்.
இதில் வைஃபை மூலம் இன்டர்நெட் இணைப்பு வசதியையும் பெறலாம். புளூடூத் போன்றவற்றின் மூலம் தகவல்களை எளிதாக பரிமாறி கொள்ளலாம். இதன் மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் 32ஜிபி வரை விரிவுபடுத்தலாம்.
ஜிபிஆர்எஸ், எட்ஜ் போன்ற தொழில் நுட்பங்களையும் இது கொண்டிருக்கிறத அருமையான இந்த ஸ்மார்டபோன் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், இந்த மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications