விண்டோஸ் மேங்கோ ஓஎஸ் கொண்ட புதிய இசட்டிஇ ஸ்மார்ட்போன்

இந்த இசட்டிஇ டேனியா மேங்கோ 7.5 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைக் கொண்டது. இதன் மூலம் உயர்ந்த தொழில் நுட்பத்தைப் பெற முடியும். 4.3 இஞ்ச் திரை வசதி கொண்டது. இது 480 X 800 ரிசல்யூஷனும் வழங்குகிறது.
இதில் 5 மெகா பிக்ஸல் கேமரா வசதியும் உள்ளது. இசட்டிஇ டேனியா மொபைல் 1 X ஆப்டிக்கல் சூம் மற்றும் லெட் பிளாஷ் வசதி கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த மொபைல் 3ஜி காம்பாட்டிபிலிட்டி கொண்டது. இதில் 1ஜிஎச்எசட் பவர்ஃபுல் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் நவீன வசதிகளைப் பெற முடியும்.
இதில் புளூடூத் வெர்ஷன் 3.0 அல்லது 2.1, டபிள்யூஎல்ஏஎன், வைபை, மல்டி ஃபார்மெட் மீடியா பிளேயர் போன்ற சவுகரியங்களும் உள்ளது.
மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட இந்த இசட்டிஇ டேனியா மொபைல் ஆன்ட்ராய்டு வசதி கொண்ட மொபைல்களுக்கு போட்டியாக இருக்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதனுடைய வசதிக்குத் தகுந்த விலையில் இந்த இசட்டிஇ டேனியா மொபைல் நிச்சயம் இருக்கும் என்று அனைவராலும் நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications
