மற்ற ஸ்மார்ட்போன்களை ஓரங்கட்ட வரும் புதிய ஆர்பிட் ஸ்மார்ட்போன்!

நவீன தொழில் நுட்பங்களை கொடுத்து வரும் இசட்டிஇ நிறுவனம், அனைவரையும் ஆச்சர்யத்தில் பல புதிய மொபைல்களை கொடுத்து கொண்டு வருகிறது. சமீபமாக ஆர்பிட் என்ற புதிய ஸ்மார்ட்போனை இசட்டிஇ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முக்கியமான விஷயம் என்னவென்றால் இது விண்டோஸ் டேங்கோ ஆப்பிரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.
எந்த ஸ்மார்ட்போனாக இருந்தாலும் அனைவரும் முதலில் எதிர் பார்ப்பது அதன் இயங்குதளம். ஆர்பிட் ஸ்மார்ட்போன் டேங்கோ ஆப்பிரேட்டிங் சிஸ்டத்தை கொண்டது. ஆப்பிரேட்டிங் சிஸ்டத்தில் அசத்தும் இந்த ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும் கொண்டுள்ளது. அதுவும் லெட் ஃபிளாஷ் தொழில் நுட்பத்தினையும் வழங்கும். தகவல்களை பதிவு செய்து கொள்ள இதில் 4 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
பிரவுசிங் வசதியை பயன்படுத்த வைபை தொழில் நுட்பமும், தகவல்களை எளிதாக பரிமாறி கொள்ள புளூடூத் வசதியும் இந்த ஆர்பிட் ஸ்மார்ட்போனில் உள்ளது. அதி வேகத்தில் செயல்படும் ஸ்மார்ட்போனை எதிர் பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த இசட்டிஇ ஆர்பிட் ஸ்மார்ட்போன் சிறந்ததாக இருக்கும்.
பன்படுத்துவோரது சேவைகளை பூர்த்தி செய்து வாடிக்கையாளர்களை
திருப்திபடுத்தும் இந்த ஆர்பிட் ஸ்மார்ட்போனின் விலை நிச்சயம் திருப்திகரமானதாக இருக்கும். ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் விலை இன்னும் சரிவர வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications