7 இஞ்ச் பிரம்மாண்ட திரையுடன் இசட்டிஇ ஸ்மார்ட்போன்!

உயர்ந்த தொழில் நுட்ப வசதியினை வழங்கி வாடிக்கையாளர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி வருகிறது இசட்டிஇ நிறுவனம். டி-72 என்ற புதிய ஸ்மார்ட்போனை இசட்டிஇ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3.5 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும்.
இதன் திரை அளவை பார்த்தால் நிச்சயம் ஒரு கணம் திகைக்க வைக்கும். டி-72 ஸ்மார்ட்போன் 7 இஞ்ச் பிரம்மாண்டமான திரையை கொண்டது. இதன் மூலம் 600 X 1024 பிக்ஸ்ல் திரை துல்லியத்தினை பெறலாம். இதில் உள்ள கேமரா 3.1 மெகா பிக்ஸலை வழங்கும். சிடிஎம்ஏ நெட்வொர்க் வசதிக்கு இந்த ஸ்மார்ட்போன் சப்போர்ட்
செய்யும்.
மிக கவர்ச்சியான வடிவமைப்பை பெற்று இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் தனது அகன்ற திரையிலேயே அனைவரையும் கவர்ந்தவிடும். பிரவுசிங் வசதியை இந்த ஸ்மார்ட்போனில் பயன்படத்த, வைபை தொழில் நுட்பத்தையும் வழங்கும்.
ஆன்ட்ராய்டு ஓஎஸ் கொண்டு இயங்கும் டி-72 ஸ்மார்ட்போன் இந்த மாதத்திற்குள் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. நிச்சயம் இதன் மிடுக்கான தோற்றத்திலும், உயர்ந்த தொழில் நுட்பத்திலும் பார்ப்பவர்களின் பார்வையை தன் பக்கம் ஈர்த்து கொள்ளும். இதன் விலை வெளியாகும் வரை வாடிக்கையாளர்கள் சற்று காத்திருக்க வேண்டி இருக்கிறது.


Click it and Unblock the Notifications