Home
Mobile

நேவிகேஷன் வசதியுடன் புதிய ஆன்ட்ராய்டு போன்: இசட்டிஇ அறிமுகம்

By Super
நேவிகேஷன் வசதியுடன் புதிய ஆன்ட்ராய்டு போன்: இசட்டிஇ அறிமுகம்
ஸ்கோர் X 500 என்ற பெயரில் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது இசட்இடி நிறுவனம். கிராமப்புற சந்தையை குறிவைத்து இந்த புதிய ஸ்மார்ட்போனை களமிறக்கியுள்ளது இசட்டிஇ நிறுவனம். இயக்குவதற்கு எளிமையாக இருப்பதால் பாமர மக்களும் எளிதாக பயன்படுத்தும் அம்சங்களை இந்த மொபைல் கொண்டிருக்கிறது.

ஆன்ட்ராய்டு 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த மொபைல் 3.5 இஞ்ச் திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், லினக்ஸ் 2.6.35 கெர்னல் சாப்ட்வேர் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை சப்போர்ட் செய்கிறது. இந்த மொபைலின் திரை 320 X 480 பிக்ஸல் துல்லியத்தை கொடுக்கிறது.

இதில் 32 பிட் கியூவல்காம் எம்எம்எஸ் 7267 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ப்ராசஸர் அதிவேக செயல்பாடுகளுக்கு துணைபுரியும். இந்த மொபைல் 130 கிராம் எடை கொண்டது. 512 எம்பி திறன் கொண்ட ரேம் பொருத்தப்பட்டுள்ளது.

மல்டி டச் வசதி கொண்ட இந்த மொபைல் எளிதாக இயங்க வைக்கும் சவுகரியத்தைத் தருகிறது. யூஎஸ்பி 2.0 போர்ட், புளூடூத் மற்றும் வைபை வசதியும் உள்ளது. 3.15 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பிரம்மிப்பூட்டும் வகையில் 2048 X 1356 பிக்ஸல் துல்லியத்தை கொடுக்கிறது.

சேட்டிலைட் நேவிகேஷன் தொழில் நுட்பத்தி்ற்கும் இது துணை புரிகிறது. ஆக்சிலரோமீட்டர் வசதியையும் கொடுக்கிறது. இதில் 1,200 எம்ஏஎச் லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ரூ.4,000 விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X