Home
Mobile

13எம்பி கேம்; 3000 எம்ஏஎச் பேட்டரி உடன் நூபியா எம்2 ப்ளே.!

நுபியா இசெட்17 மினி மற்றும் நுபியா இசெட்17 ஆகிய தலைமை ஸ்மார்ட்போன்,களை துவக்கிய பிறகு, இசெட்டிஇ நிறுவனம் இப்போது ஐஹன் நூபியா எம்M2 ப்ளே என்ற குறைந்த பட்ஜெட் தொலைபேசி ஒன்றை வெளியிட்டுள்ளது.

By Muthuraj

நுபியா இசெட்17 மினி மற்றும் நுபியா இசெட்17 ஆகிய தலைமை ஸ்மார்ட்போன்களை துவக்கிய பிறகு, இசெட்டிஇ நிறுவனம் இப்போது ஐஹன் நூபியா எம்2 ப்ளே என்ற குறைந்த பட்ஜெட் தொலைபேசி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய நூபியா எம்2 ப்ளே ஸ்மார்ட்போன் ஆனது நூபியா தொலைபேசிகளின் எம்2 தொடர் கருவிகளுக்கு சொந்தமானது. இந்த நூபியா எம் 2 ப்ளே என்பது ஒரு கேமரா-மைய ஸ்மார்ட்போன் மற்றும் எம்2 ஸ்மார்ட்போனை விட குறைந்த அம்சங்களை கொண்டிருந்தாலும் எம்2 லைட் மாதிரியைப் போலவே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அனைத்து கோண புகைப்படங்களுடன் இக்கருவி கொண்டுள்ள அம்சங்கள் என்னென்ன என்பதை பற்றிய விவரங்கள் இதோ.!

கைரேகை ரீடர்

கைரேகை ரீடர்

இக்கருவியை முன்பக்கம் கைரேகை ரீடர் முன்பக்க கண்ணாடியின் கீழ் வைக்கப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 435 செயலி கொண்டிருப்பதால் இக்கருவி ஒரு உயர் இறுதி தொலைபேசி அல்ல என்பதை தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது, எஸ்டி 435 சிப்செட் மற்றும் 3ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

மீடியா டெக்

மீடியா டெக்

மறுபக்கம் நுபியா எம்2 கருவியானது ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி மற்றும் 4 ஜிபி ரேம் மூலம் இயக்கப்படுகிறது. எம்2 லைட் ஆனது மீடியா டெக் எம்டி6750 சிப்செட் மற்றும் 4 ஜிபி ரேம் ஆகியவற்றால் சக்தியூட்டப்படுகிறது.

32 ஜிபி

32 ஜிபி

32 ஜிபி உள் சேமிப்புடன் 128 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி அதை வழியாக நீட்டிக்கக்கூடிய ஆதரவு கொண்ட இந்த சாதனத்தின் விளிம்பில் 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் ஒரு மைக்ரோசாப்ட் போர்ட் ஆகிய இணைப்பு ஆதரவுகள் உள்ளன. சாதனத்தில் யூஎஸ்பி டைப்-சி அடாப்டர் ஆதரவும் அடங்கும்.

13 மெகாபிக்சல்

13 மெகாபிக்சல்

புகைப்படத்துறையை பொறுத்தமட்டில் நூபியா எம்2 ப்ளே எப் / 2.2 துளை கொண்ட (சோனி) ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. இரைச்சல் குறைப்பு, 3டி இரைச்சல் குறைப்பு, வேகமான போகஸ் மற்றும் மங்கலான ஒளி புகைப்படம் போன்ற அம்சங்கள் கொண்டு வருகிறது.

5-மெகாபிக்சல்

5-மெகாபிக்சல்

முன்பக்க கேமராவை பொறுத்தமட்டில் எப் / 2.4 துளை லென்ஸ் ஆதரவுடன் 84-டிகிரி வைட்-ஆங்கிள் லென்ஸ் கொண்ட 5-மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது. இது ஆண்ட் ராய்டு 7.0 நௌவ்கட் அடிப்படையிலான நிறுவனத்தின் நூபியா யூஐ 5.0 கொண்டு இயங்குகிறது.

3000 எம்ஏஎச் பேட்டரி

3000 எம்ஏஎச் பேட்டரி

3000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் இக்கருவி ப்ளூடூத் 4.0 மற்றும் டூயல் பேண்ட் 2.4 ஜிகாஹெர்ட்ஸ் வைஃபை ஆகிய இணைப்பு ஆதரவுகளையும் கொண்டுள்ளது. "மெல்லிய, வலுவான, விரைவானது" என்று நிறுவனத்தின் மூலம் கூறப்படும் இந்த சாதனத்தின் செயல்திறனைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை, ஆனால் அதன் மெட்டல் வடிவமைப்பில் டைமண்ட் கட் சட்டத்தைக் கொண்டிருப்பதால் சாதனம் வலிமையானதாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது உறுதியாகிறது.

உத்தியோகபூர்வமாக தகவல்கள்

உத்தியோகபூர்வமாக தகவல்கள்

அளவீட்டில் 7.9 மிமீ தடிமன் கொண்டுள்ள எம்2 ப்ளே ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் தகவல்கள் பற்றிய உத்தியோகபூர்வமாக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

Best Mobiles in India

English summary
ZTE Nubia M2 Play Camera Smartphone Launched. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X