Home
Mobile

அமெரிக்காவில் தரிசனம் தந்த புதிய இசட்டிஇ ஸ்மார்ட்போன்!

By Super
அமெரிக்காவில் தரிசனம் தந்த புதிய இசட்டிஇ ஸ்மார்ட்போன்!

சீன நிறுவனமான இசட்டிஇ, 3ஜி தொழில் நுட்பம் கொண்ட நோவா 3.5 என்ற ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது. ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும்.

ஆனால் இந்த ஸ்மார்ட்போன் ஐஸ் கிரீம் சான்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு சப்போர்ட் செய்யுமா என்பது இன்னும் சரியாக தெரியவரவில்லை. இதன் இயங்குதளத்திற்கு துணை புரிய 800 மெகாஹெர்ட்ஸ் கியூவல்காம் எம்எஸ்எம்-7625 பிராசஸரையும் கொண்டது.

3ஜி தொழில் நுட்பம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், டியூவல் கேமராவினை வழங்கும். 3.15 மெகா பிக்ஸல் கேமராவும், விஜிஏ முகப்பு கேமராவினையும் கொண்டுள்ளது. இதன் 3.15 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் 2048 X 1536 மெகா பிக்ஸல் துல்லியத்தினை கொடுக்கும்.

இதன் ஸ்டாண்டர்டு எல்ஐ-அயான் பேட்டரியின் மூலம் நீடித்து உழைக்கும் ஆற்றலை வழங்கும். வருகிற பிப்ரவரி மாதம் வெளியாக இருக்கும் இந்த இசட்டிஇ நோவா 3.5 ஸ்மார்ட்போனின் விலை விவரம் இன்னும் சரிவர வெளியாகவில்லை.

அமெரிக்காவில் சிடிஐஏ கான்பிரன்ஸில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X