ஒய்யாரம் காட்ட வரும் புதிய எப் டிவி ஸ்மார்ட்போன்!

அதிகமாக மலிவு விலை மொபைல்களை கொடுத்து இருக்கிறது இசட்டிஇ நிறுவனம். அது மட்டுமல்லாமல் நிறைய ஸ்மார்ட்போன்களை அளித்து இருக்கிறது. இப்படி பல சாதனைகளை மின்னனு உலகில் சாதித்த இசட்டிஇ நிறுவனம், அந்த சாதனை பட்டியலில் புதிய ஸ்மார்ட்போனை கூடிய விரைவில் சேர்க்க இருக்கிறது. எப்டிவி என்ற பெயர் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், எப்டிவி பிளேட் ஃபேஷன் ஸ்மார்ட்போன் என்ற பெயரையும் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஒயிட், பிளாக், கோல்டு போன்ற வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 3.5 இஞ்ச் அமோல்டு மல்டி டச் திரை வசதி கொண்டது. இதனால் 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை தர முடியும்.
கூகுள் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 600 மெகாஹெர்ட்ஸ் ஏஆர்எம் 11 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஓஎஸ் எந்த வித தடையும் இல்லாமல் வேகமாக இயங்க துணை புரியும்.
அட்ரினோ கிராஃபிக்ஸ் 200 தொழில் நுட்பமும் கொண்டது. இன்டர்நெட் வசதியை எந்த வித சிரமும் இல்லாமல் பெற இதில் ஜிபிஆர்எஸ், எட்ஜ் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு பிரையோ அப்டேஷன் வசதியினை கொடுக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் 3.15 மெகா பிக்ஸல் கேமரா, 2048 x 1536 பிக்ஸல் துல்லியத்தினை கொடுக்கும்.
ஸ்டான்டர்டு 1250 எம்ஏஎச் எல்-ஐ அயான் பேட்டரி மூலம் 4 மணி நேரம் டாக் டைம் மற்றும் 192 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் பெறலாம். நிறைய அப்ளிகேஷன்களையும், புதிய வசதிகளையும் கொடுக்க இருக்கும் இந்த எப்டிவி ஸ்மார்ட்போனின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. கூடிய விரைவில் இதன் விலையும் அதிகார
பூர்வமாக அறிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications