Home
Mobile

எம்டபுள்யூசி2018: மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம்படுத்திய இசெட்டிஇ.!

இசெட்டிஇ டெம்போ கோ 5எம்பி ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை 79.99 டாலர்கள் (ரூ.5,172) எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash

செட்டிஇ (ZTE) நிறுவனம் தற்சமயம் நடைபெறும் எம்டபுள்யூசி2018 நிகழ்ச்சியில் இசெட்டிஇ பிளேட் வி9, இசெட்டிஇ பிளேட் வி9 வீட்டா ,இசெட்டிஇ டெம்போ கோ போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்பின்பு பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள். இப்போது அறிமுகம் செய்யப்பட்ட இசெட்டிஇ ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் அமெரிக்கா, ஐரோப்பா, மெக்ஸிக்கோ, மற்றும் சீனா போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் இந்த புதிய இசெட்டிஇ ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.

இசெட்டிஇ டெம்போ கோ:

இசெட்டிஇ டெம்போ கோ:

இசெட்டிஇ டெம்போ கோ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 480×854 பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த
ஸ்மார்ட்போன் மாடல்.

விலை:

விலை:

இசெட்டிஇ டெம்போ கோ 5எம்பி ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை 79.99 டாலர்கள் (ரூ.5,172) எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இசெட்டிஇ பிளேட் வி9:

இசெட்டிஇ பிளேட் வி9:

இசெட்டிஇ பிளேட் வி9 ஸ்மார்ட்போன் 5.7-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1,440×2,160 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 செயலி மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். இசெட்டிஇ பிளேட் வி9 ஸ்மார்ட்போன் 3ஜிபி/4 ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது.

விலை:

விலை:

இசெட்டிஇ பிளேட் வி9 ஸ்மார்ட்போனில் 16எம்பி + 5எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பி கேமரா இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு 3100எம்ஏஎச் பேட்டரி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இக்கருவியின் விலை 269 டாலர்கள் (ரூ.21,427) ஆக உள்ளது.

இசெட்டிஇ பிளேட்  வி9 வீட்டா:

இசெட்டிஇ பிளேட் வி9 வீட்டா:

இசெட்டிஇ பிளேட் வி9 வீட்டா ஸ்மார்ட்போன் மாடல் 5.45-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் 18:9 திரைவிகிதம்
மற்றும் ஸ்னாப்டிராகன் 435 செயலி இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கருவி 2ஜிபி/3 ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
விலை:

விலை:

இசெட்டிஇ பிளேட் வி9 வீட்டா ஸ்மார்ட்போனில் 13எம்பி + 2எம்பி ரியர் கேமரா அமைப்பு மற்றும் 5எம்பி செல்பீ கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது. மேலும் 3200பேட்டரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை 179 டாலர்கள்
(14,260) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
ZTE launches Blade V9, Blade V9 Vita and Tempo Go smartphones at MWC 2018; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X