Home
Mobile

வாடிக்கையாளர்களை வாவ்.... சொல்ல வைக்கும் இசட்டிஇ கிஸ் ஸ்மார்ட்போன்!

By Super
வாடிக்கையாளர்களை வாவ்.... சொல்ல வைக்கும் இசட்டிஇ கிஸ் ஸ்மார்ட்போன்!

நவீன தொழில் நுட்ப வசதிகளை கொடுத்து வந்த இசட்டிஇ நிறுவனம் இப்போது இசட்டிஇ கிஸ் ஸ்மார்ட்போன்களையும் வெளியிட்டு வருகிறது. இசட்டிஇ கிஸ் என்ற புதிய 2ஜி தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனை இந்நிறுவனம் உருவாக்கி உள்ளது. இது ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.

ஆன்டராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன் என்பதால் நவீன வசதிகளின் பயன்பாடுகளை கேட்வே வேண்டாம். நிச்சயம் வாடிக்ககையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனில் புதிய வசதிகளையும் பயன்படுத்த முடியும். இதன் அகன்ற 3.5 இஞ்ச் திரை உள்ளதால் 320 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறுவதில் எந்த சந்தேகமும் இல்லை.

எந்த மொபைலாக இருந்தாலும் அதன் கேமரா வசதியினை கவனமாக பார்ப்பது மொபைல் வாடிக்கையாளர்களின் ஆர்வம். இந்த ஸ்மார்ட்போன் நிச்சயம் பயன்படுத்துவோருக்கு திருப்தியையும் அளிக்கும். இதில் 3.15 மெகா பிக்ஸல் கேமரா உள்ளது. இதனால் சிறந்த புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் சுலபமாக பெறலாம்.

இதன் 2ஜிபி மெமரி வசதியினை 32 ஜிபி வரை விரிவுபடுத்தவும் முடியும். இதனால் எவ்வளவு தகவல்களை வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்.

2ஜி தொழில் நுட்பத்திற்கு முழுமையாக சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் எல்ஐ-அயான் ஸ்டான்டர்டு பேட்டரி வசதியின் மூலம் 1,600 எம்ஏஎச் பேட்டரியும் இதில் உள்ளது. இதில் ஒரு ஆச்சர்யத்தக்க விஷயம் என்னவென்றால் இது 10 மிணி நேரம் டாக் டைம் மற்றும் 500 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் வழங்கும்.

இந்த இசட்டிஇ கிஸ் ஸ்மார்ட்போனின் விலை இன்னும் வெளியாகவில்லை என்றாலும், இது கவர்ச்சிகரமான விலை கொண்டதாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X