Home
Mobile

சர்வதேச மொபைல் கண்காட்சியில் இசட்டிஇ எரா ஸ்மார்ட்போன்!

By Super
சர்வதேச மொபைல் கண்காட்சியில் இசட்டிஇ எரா ஸ்மார்ட்போன்!

மொபைல் குவியல்களை வாடிக்கையாளர்களின் கண் முன்பு நிறுத்தி இருக்கும் சர்வதேச மொபைல் கண்காட்சியில் எண்ணற்ற மொபைல்கள் பங்கு பெற்றுள்ளன. இதில் நிறைய சிறந்த நிறுவனங்களின் மொபைல்கள் இடம் பெற்றுள்ளன. இசட்டிஇ நிறுவனம் இந்த கண்காட்சியில் எரா என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அனைவரும் பயன்படுத்த விரும்பும் ஆன்ட்ராய்டு வி4 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.

எரா ஸ்மார்ட்போன் பிரம்மாண்டமான 4.3 இஞ்ச் திரை வசதியை கொண்டுள்ளது. இதனால் நிறைய தகவல்களை தெளிவாக பார்க்க முடியும். டிஎப்டி தொடுதிரை வசதியினை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 16 எம் கலர்களுக்கு சப்போர்ட் செய்யும். டியூவல் கேமரா வசதியினை வழங்கும் இந்த ஸ்மார்ட்போனில் 8 மெகா பிக்ஸல் கேமராவினையும் மற்றும் விஜிஏ முகப்பு கேமராவினையும் கொண்டுள்ளது.

இதனால் இந்த எரா ஸ்மார்ட்போனின் மூலம் துல்லியமான புகைப்படம் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெற முடியும். கேமராவினை பொருத்த வரையில் மட்டும் அல்ல, 3ஜி நெட்வொர்க் தொழில் நுட்பத்திலும் இந்த ஸ்மார்ட்போன் சிறந்த முறையில் துணை புரிகிறது. 2ஜிபி வரை எக்ஸ்டர்னல் வசதியினை கொண்ட இந்த இசட்டிஇ எரா ஸ்மார்ட்போனில், 32ஜிபி வரை இதன் மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளவும் முடியும்.

பொழுதுபோக்கு அம்சமான ஆடியோ, வீடியோ, எப்எம் போன்ற சவுகரியங்களுக்கு இதில் குறைவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இதன் சிறந்த தொழில் நுட்பத்திற்கு துணை புரியும் வகையில் எல்ஐ-அயான் செகன்டரி பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இயங்குதளத்தை சிறப்பாக இயங்க வைக்கும் பொருட்டு என்விஐடிஐஏ டெக்ரா-3 1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸரும் உள்ளது.

சர்வதேச மொபைல் கண்காட்சியில் அறிமுகமாகி இருக்கும் இந்த இசட்டிஇ எரா ஸ்மார்ட்போனின் விலை இன்னும் சரிவர வெளியாகவில்லை. கூடிய விரைவில் இந்நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஸ்மார்ட்போன்களை வெளியிடும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X