Home
Mobile

மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் இசட்டிஇ கிரசன்ட்!

By Super
மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் இசட்டிஇ கிரசன்ட்!

ஒவ்வொரு நிறுவனமும் வாடிக்கையாளர்களின் மன நிலைக்கு தகுந்த யுக்திகளை கையாள ஆரம்பித்துவிட்டன. எதை மக்கள் சவுகரியம் என்று கருதுகின்றனரோ, அதற்கு ஏற்ற வகையில் பொருள்களும் வெளிவர துவங்கிவிட்டன.

இதே போல் இசட்டிஇ பிளேடு என்ற மொபைலை இன்னும் சில மேம்படுத்தப்பட்ட வகையில் இசட்டிஇ க்ரெசன்ட் என்ற பெயரில் உருவாக்கியுள்ளது இசட்டிஇ நிறுவனம். இந்த மொபைல் ஆன்ட்ராய்டு 2.3.5 வெர்ஷன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது. இசட்டிஇ பிளேடு மொபைல் மக்கள் மத்தியில் சிறந்த வெற்றியை பெற்றது.

சிறந்த தொழில் நுட்பம் கொண்ட மொபைல்கள் நிச்சயம் சிறந்த வெற்றியினை தான் பெறும். இந்த க்ரெசன்ட் மொபைல் 120 கிராம் எடை கொண்ட மொபைலாகும். 800 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் கியூவல்காம் எம்எஸ்எம்7227டி பிராசஸரையும் மற்றும் அட்ரினோ 200 கிராஃபிக்கல் கன்ட்ரோலர் தொழில் நுட்பத்தையும் கொண்டது.

512 எம்பி ரேம் மற்றும் ப்ளாஷ் இஇபிஆர்ஓஎம் ரோம் வசதியை வழங்கும். இந்த மொபைல் மல்டி டச் திரையினையும், 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தையும் கொடுக்கும். இப்படி இதில் பயன்படுத்தப்பட்ட திரையில் இருந்து, இதில் கொடுக்கப்பட்டுள்ள பிராசஸர் வரை எல்லாமே உயர்ந்த தொழில் நுட்பம் கொண்டது.

க்ரெசன்ட் மொபைல் 4.92 பிக்ஸல் கேமராவினை கொண்டிருக்கிறது.

இதில் வீடியோ காலிங் வசதிக்காக .31 மெகா பிக்ஸல் கொண்ட அடிப்படை முகப்பு கேமராவினையும் கொண்டுள்ளது. இதில், 1X ஆப்டிக்கல் சூம் வசதியனையும் பெறலாம்.

இனி ஜேபிஜி ஃபார்மெட்டில் புகைப்படத்தை மாற்ற வேண்டும் என்றால் கணினிக்கு செல்ல வேண்டியதில்லை. இந்த வசதியினை இந்த க்ரெசன்ட் மொபைலிலேயே பெறலாம். ஆம்! இந்த மொபைலில் சிஎம்ஓஎஸ் சென்ஸார் உள்ளதால் ஜேபிஜி ஃபார்மெட்டில் புகைப்படத்தை மாற்றும் வசதியும் உள்ளது.

ஆர்டிஎஸ் ரேடியோ ரிசீவர் தொழில் நுட்பத்துடன் இதில் எப்எம் ரேடியோ வசதியினை பெற முடியும். இசட்டிஇ க்ரெசன்ட் மொபைல் ஜிபிஆர்எஸ் க்ளாஸ் 12, எட்ஜ் க்ளாஸ் 10 மற்றும் எச்எஸ்டிபிஏ 7.2 போன்ற தொழில் நுட்பங்களையும் கொடுக்கும்.

உயர் ரக தொழில் நுட்பங்களுடன் இந்திய சந்தைக்கு விரைவில் வரும் இந்த மொபைலின் விலை, இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

விலை கொஞ்சம் கூடுதலாக இருந்தாலும், நவீன மொபைல்களை வாங்கி பயனடைய விரும்பும் வாடிக்கையாளர்கள் நிச்சயம் இந்த இசட்டிஇ க்ரெசன்ட் மொபைலை பெற்று பயனடையலாம்.

தொழில் நுட்பத்திற்கு ஏற்ற விலையில் இந்த மொபைல் விற்பனைக்கு வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X