இசட்டிஇ வழங்கும் புதிய மியூசிக் மொபைல்!

மியூசிக் கேட்கும் வசதியுடன் பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் மொபைல்போன்களுக்கு மார்க்கெட்டில் அதிக வரவேற்பு உள்ளது. இதனால், பல நிறுவனங்கள் பிரத்யேக மியூசிக் போன்களை தயாரிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. அந்த வகையில், உருவாக்கப்பட்டுள்ளது இசட்டிஇ கோரஸ் மொபைல்.
இது ஒரு மியூசிக் ஓரியன்டட் மொபைல்போன். சீன நிறுவனமான இசட்டிஇ நிறுவனத்தின் இந்த புதிய மொபைல், அடிப்படையில் மியூசிக் வசதியினை அள்ளி வழங்கும்.
இசை பிரியர்களின் வாழ்வை இன்பகரமான ஒன்றாக மாற்ற இருக்கிறது இந்த புதிய இசட்டிஇ மொபைல். இதில் எச்டி எஸ்ஆர்எஸ் டபிள்யூஓடபிள்யூ தொழில் நுட்பத்தினை கொண்டது. இந்த எஸ்ஆர்எஸ் சவுன்டு செட்டிங்ஸ் மூலம் பாப், ராக், ஹிப் ஹாப், ப்ளூஸ், அக்கஸ்டிக்ஸ் என்று பாடல்களை விருப்பமான மோடுகளில் கேட்கலாம்.
105 கிராம் எடை கொண்ட இந்த போன் 3.2 இஞ்ச் அகன்ற திரை வசதியை கொண்டது.
இந்த மொபைல் டிஎப்டி டபிள்யூவிஜிஏ திரையை கொண்டுள்ளது. உயர்ந்த 600 மெகாஹெர்ட்ஸ் பிராசஸர் மூலம் இயங்கும் இந்த மொபைல் 2.0 மெகா பிக்ஸல் கேமராவினையும் கொண்டுள்ளது.
இதனால் புகைப்படம் எடுப்பது பற்றி பஞ்சமே இல்லை. இதில் எல்ஐ-அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் 220 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும், 4.2 மணி நேரம் டாக் டைம் வசதியினையும் பெறலாம்.
இந்த இசட்டிஇ கோரஸ் மொபைலின் விலை பற்றி எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications
