ஆண்ட்ராய்டு நௌவ்கட், 3000எம்ஏஎச் பேட்டரி கொண்ட இசெட்டிஇ பிவி0870.!

சீனாவின் டிஇஎன்ஏஏ தளத்தில் ஸ்மார்ட்போன் மாடல் எண் பிவி0870 என்ற பெயரில் இசெட்டிஇ ஸ்மார்ட்போன் ஒன்று காணப்பட்டது.

|

மற்றொரு இசெட்டிஇ ஸ்மார்ட்போன் ஒன்று வெளியீட்டுக்கு தயாராகுவது போன்று தோன்றுகிறது. சீனாவின் டிஇஎன்ஏஏ (TENAA) தளத்தில் ஸ்மார்ட்போன் மாடல் எண் பிவி0870 என்ற பெயரில் இசெட்டிஇ ஸ்மார்ட்போன் ஒன்று காணப்பட்டது. வெளியான பட்டியல் ஸ்மார்ட்போன் சார்ந்த ஒரு சில முக்கிய குறிப்புகள் வெளிப்படுத்துகிறது.

ஆண்ட்ராய்டு நௌவ்கட், 3000எம்ஏஎச் பேட்டரி கொண்ட இசெட்டிஇ பிவி0870.!

ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் மூலம் வெளியாகியுள்ள இந்த தகவலின்கீழ் இக்கருவி இசெட்டிஇ பிவி0870 என்றும் இக்கருவி மற்ற ஸ்மார்ட்போன்களை போன்றே ஒரு மெல்லிய உலோக உடல் கொண்டுள்ளதாக தெரிகிறது. வெளியான படங்களை அடிப்படையாக கொண்டு, ஸ்மார்ட்போன் பின்னால் ஒரு கைரேகை ஸ்கேனர் வருகிறது அது பின்புற கேமரா கீழே வைக்கப்படுகிறது.

அதற்கு கீழே ஒரு இசெட்டிஇ லோகோ உள்ளது. பின்புறத்தின் மேல் மற்றும் கீழ் சற்று வித்தியாசமான தோற்றத்தை கொடுக்கும், சிறிது இருண்ட தொனியைக் கொண்டுள்ளன. கருவியின் பவர் பொத்தான் வலதுபுறத்தில் இருக்கிறது, வால்யூம் பொத்தான்கள் வலதுபுறத்தில் வைக்கப்பட்டுள்ளது.

யூஎஸ்பி மற்றும் ஆடியோ போர்ட்கள் அடிப்படையான முறையில் வைக்கபடலாம், இருப்பினும் வெளியான படங்கள் உண்மையாகும் பட்சத்தில் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போனும் மிகவும் மெலிதாக தெரிகிறது மற்றும் முன்பக்கம் குறுகிய பெஸல்கள் பெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதுவரை வெளியான தகவல்களில் இருந்து இக்கருவி முழு எச்டி தீர்மானம் ஒரு 5.5 அங்குல டிஸ்பிளே கொண்டு 2 ஜிபி, 3 ஜிபி மற்றும் 4 ஜிபிரேம் கொண்ட பல மாடல்களில் ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இது பல்வேறு சேமிப்பக விருப்பங்களில் - 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி - .வெளிவரலாம். ஆனால் இதுவரை, ரேம் மற்றும் ரோம் கலவை எப்படி இருக்கும் என்பது சார்ந்த விவரங்கள் இல்லை. ஆனால் அடிப்படை மாதிரியானது, 16 ஜிபி சேமிப்புடன் 2ஜி பி ரேம் கொண்டிருக்கலாம்.

ஸ்மார்ட்போனின் அனைத்து வகைகளும் கூடுதல் சேமிப்பக விரிவாக்கத்திற்கான மைக்ரோ எஸ்டி ஸ்லாட்டை கொண்டு வர வாய்ப்புள்ளது. பட்டியலின் படி, இக்கருவி மைக்ரோ எஸ்டி வழியாக 128ஜிபி வரை சேமிப்பு விரிவாக்க்க ஆதரவு வழங்குகிறது. கருவியின் துல்லியமான சிப்செட் பிராண்ட் தெரியாத நிலையில், ஸ்மார்ட்போன் 1.4ஜிகாஹெர்ட்ஸ் செயலி மூலம் இயக்கப்படலாம். மேலும் ஒரு 3,000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சாதனம் இயங்கும். மென்பொருளை பொறுத்தம்மட்டில் ஸ்மார்ட்போன் இசெட்டிஇ கஸ்டம் ஸ்கின் கொண்ட ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கலாம்.

ஆண்ட்ராய்டு நௌவ்கட், 3000எம்ஏஎச் பேட்டரி கொண்ட இசெட்டிஇ பிவி0870.!

கேமரா துறையை பொறுத்தம்மட்டில் ஒரு 16 மெகாபிக்சல் பின்புற ஸ்னாப்பர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்டியலிடப்பட்ட படங்களிலிருந்து இந்த ஸ்மார்ட்போன் இரட்டை கேமராவைக் கொண்டிருக்காது என்பது தெளிவாக தெரிகிறது. படிப்படியாக இடைப்பட்ட மற்றும் பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் பொதுவானதாகி வரும் இக்கருவி ஒரு 8 மெகாபிக்சல் முன்பக்க்க கேமரா கொண்டு கருப்பு, தங்கம், சாம்பல் மற்றும் வெள்ளி ஆகிய நான்கு வண்ண விருப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
ZTE BV0870 with Android Nougat, 3,000mAh battery spotted on TENAA. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X