விரைவில் : டூயல் ரியர் கேமராவுடன் வெளிவரும் இசெட்டிஇ பிளேட் வி9 ப்ரோ.!
இந்த ஸ்மார்ட்போனில் 16+5 எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.
இசெட்டிஇ நிறுவனம் விரைவில் டூயல் ரியர் கேமரா அமைப்புடன் புதிய பிளேட் வி9 ப்ரோ என்ற ஸ்மார்ட்போனை மெரிக்காவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் சார்பில் சான்றிதழ் கிடைத்துள்ளது. கருப்பு மற்றும் தங்க நிறங்களில் இசெட்டிஇ பிளேட் வி9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

இசெட்டிஇ பிளேட் வி9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 5.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2160 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இடம்பெற்றுள்ளது.
ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த இசெட்டிஇ பிளேட் வி9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

இக்கருவி 2ஜிபி/3ஜிபி/4ஜிபி மற்றும் 16ஜிபி/32/ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.
மிகவும் அதிகம் எதிர்பார்த்த கைரேகை ஸ்கேனர் தொழில்நுட்பம் கொண்டுள்ளது இசெட்டிஇ பிளேட் வி9 ப்ரோ மாடல், மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போனில் 16+5 எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.
இசெட்டிஇ பிளேட் வி9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 3200எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








