6.5-இன்ச் டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. கம்மி விலையில் அறிமுகமான புது 5G போன்.. எந்த மாடல்?
தற்போது பல முன்னணி நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன. குறிப்பா கடந்த சில மாதங்களில் இந்தியாவில் பட்ஜெட் விலையில் எக்கச்சக்கமான 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள. இந்நிலையில் ZTE நிறுவனம் பட்ஜெட் விலையில் ஒரு 5ஜி போனை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது இசட்டிஇ பிளேட் ஏ73 5ஜி (ZTE Blade A73 5G) ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்துள்ளது ZTE நிறுவனம். அதுவும் இந்த புதிய போன் தற்போது மலேசியாவில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ZTE பிளேட் ஏ73 5ஜி ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ZTE பிளேட் ஏ73 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே என்பதால் இந்த போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புத்தம் புதிய ZTE போன் வெளிவந்துள்ளது.
குறிப்பாக ஆக்டோ-கோர் யுனிசாக் டி760 (octa-core Unisoc T760) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ZTE பிளேட் ஏ73 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த போன்.
ஆனால் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த ZTE பிளேட் ஏ73 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
ZTE பிளேட் ஏ73 5ஜி ஸ்மார்ட்போன் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த அட்டகாசமான ZTE பிளேட் ஏ73 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் அதிக நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். மேலும் கைரேகை ஸ்கேனர் வசதி கொண்டுள்ளது இந்த புதிய போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

டூயல் சிம், 5ஜி, வைஃபை 801.11ஏசி, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் 5.2, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த இசட்டிஇ பிளேட் ஏ73 5ஜி ஸ்மார்ட்போன். தற்போது இந்த போன் கிரே ( Gray) நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் பல்வேறு நிறங்களில் இந்த ZTE பிளேட் ஏ73 5ஜி போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
மலேசியாவில் ZTE பிளேட் ஏ73 5ஜி ஸ்மார்ட்போனின் விலை MYR 749 (இந்திய மதிப்பில் ரூ.13,500)-ஆக உள்ளது. அதேபோல் Shopee இணையதளத்தில் தற்போது இந்த புதிய போன் விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பாக ZTE பிளேட் ஏ73 5ஜி ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








