6.88-இன்ச் டிஸ்பிளேவுடன் இசெட்டிஇ பிளேட் ஏ7 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.!
இசெட்டிஇ பிளேட் ஏ7 சாதனம் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது.
இசெட்டிஇ நிறுவனம் இந்திய சந்தையில் அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, அந்த வரிசையில் இந்நிறுவனம் இசெட்டிஇ பிளேட் ஏ7 ஸ்மார்ட்போன் மாடலை தற்சமயம் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக பட்ஜெட் விலையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இசெட்டிஇ பிளேட் ஏ7 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக சிங்கிள் ரியர் கேமரா, நாட்ச் டிஸ்பிளே, மீடியாடெக் செயலி என பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனத்தின் பல அம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
இசெட்டிஇ பிளேட் ஏ7 ஸ்மார்ட்போன் 6.88-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1560 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்செட்:
இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ பி60 ஆக்டோ-கோர் சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு
மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு:
இசெட்டிஇ பிளேட் ஏ7 சாதனம் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:
இசெட்டிஇ பிளேட் ஏ7 ஸ்மார்ட்போன் மாடல் 16எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு எல்இடி பிளாஸ், ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது
இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

பேட்டரி:
இந்த ஸ்மார்ட்போனில் 3200எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். குறிப்பாக இந்த இசெட்டிஇ பிளேட் ஏ7 சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.7,200-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications