புதிய மாறுபாடுகளுடன் களமிறங்கும் இசெட்டிஇ பிளேட் ஏ3.!
ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும் இக்கருவியின் பின்புறத்தில் ஒரு கைரேகை ஸ்கேனர் உள்ளது. எல்லாவற்றிக்கும் மேலாக இக்கருவி ஒரு 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.
கடந்த அக்டோபர் மாதம் இசெட்டிஇ பிளேட் ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது, இதை தொடர்ந்து முதலில் க்ளோசியர் ப்ளூ மற்றும் ஒப்சிடியன் பிளாக் நிறங்களில் வெளிவந்தது. தற்சமயம் புதிய மாறுபாடுகளுடன் இசெட்டிஇ பிளேட் ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது.
இசெட்டிஇ பிளேட் ஏ3 ஸ்மார்ட்போன் மாடல் தற்சமயம் க்யூட் ப்ளூ மாறுபாடுகளுடன் தற்சமயம் வெளிவந்துள்ளது, மேலும் அதிநவீன மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே
அம்சங்களை பொறுத்தமட்டில், இசெட்டிஇபிளேட் ஏ3 ஆனது 5.5 அங்குல எச்டி (720 x 1280 பிக்சல்கள்) டிஸ்பிளே கொண்டுள்ளது. உடன் 1.5ஜிகாஹெர்ட்ஸ்
க்வாட்கோர் மீடியா டெக் எம்டி6737டி செயலி கொண்டு இயங்கும்.

சேமிப்பு :
3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்ட இக்கருவி மைக்ரோ எஸ்டி கார்ட் வழியாக 128 ஜிபி வரை சேமிப்பு விரிவாக்க
ஆதரவும் வழங்குகிறது.

பேட்டரி:
ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும் இக்கருவியின் பின்புறத்தில் ஒரு கைரேகை ஸ்கேனர் உள்ளது. எல்லாவற்றிக்கும் மேலாக இக்கருவி ஒரு 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

கேமரா
ஒளியியல் துறையை பொறுத்தமட்டில், இந்த ஸ்மார்ட்போன் எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல்
என்ற இரட்டை முன் கேமராக்களையும் கொண்டுள்ளது.

இணைப்பு வசதி:
இந்த ஸ்மார்ட்போன் மூன்று சிம் அட்டைகளுக்கான ஆதரவு, 4ஜி, ப்ளூடூத், வைஃபை, ஜிபிஎஸ், மைக்ரோ யூஎஸ்பி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகிய இணைப்பு வசதிகளையும் கொண்டுள்ளது. அளவீட்டில் பிளேட் ஏ3 ஆனது 152.4 × 75.8 × 8.2 மிமீ மற்றும் 164 கிராம் எடையைக் கொண்டுள்ளது.

விலை:
இந்த ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு பொறுத்தவரை ரூ.7,793-ஆக உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications