13எம்பி ரியர் கேமராவுடன் வெளிவரும் இசெட்டிஇ பிளேட் ஏ2எஸ்.!
இசெட்டிஇ பிளேட் ஏ2எஸ் பொறுத்தவரை ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6753 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது.
இசெட்டிஇ நிறுவனம் 3ஜிபி ரேம் மற்றும் 13எம்பி ரியர் கேமராவுடன் இசெட்இ பிளேட் ஏ2எஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது, மேலும் பல்வேறு தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த இசெட்டிஇ பிளேட் ஏ2எஸ் ஸ்மார்ட்போன் மாடல் சீன வலைதளத்தில் இப்போது கிடைக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.கூடிய விரைவில் இந்திய மொபைல் சந்தையில் கிடைக்கும். மேலும் இரட்டை சிம் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

5.2-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-1920)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு :
இசெட்டிஇ பிளேட் ஏ2எஸ் பொறுத்தவரை ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6753 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத் , 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

2540எம்ஏஎச்:
இசெட்டிஇ பிளேட் ஏ2எஸ் பொறுத்தவரை 2540எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications