ZTE Blade 20 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்: 3 கேமரா, 6 ஜிபி ரேம் அம்சத்தோடு!
ZTE பிளேட் 20 5ஜி ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மூன்று கேமரா, ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 720 ப்ராசஸர் வசதி இருக்கிறது.

ZTE பிளேட் 20 5ஜி ஸ்மார்ட்போன்
ZTE பிளேட் 20 5ஜி ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6.5 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, மூன்று கேமரா அமைப்பு மற்றும் 4000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்துடன் வருகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு கைரேகை சென்சார் இதில் இருக்கிறது.

6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு
ZTE பிளேட் 20 5 ஜி ஒரே சேமிப்பு வேரியண்ட் மற்றும் இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. ZTE பிளேட் 20 5ஜி 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட்டில் வருகிறது. இதன் சீன விலை சிஎன்ஒய் 1,499 ஆக இருக்கிறது. இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.16,700 ஆக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜாஸி க்ரே, லைட் ப்ளூ மின்ட் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

ZTE பிளேட் 20 5G: அம்சங்கள்
ZTE பிளேட் 20 5G ஆண்ட்ராய்டு 10 ஆதரவோடு இயக்கப்படுகிறது. 6.52 இன்ச் டிஸ்ப்ளே 720x1,600 பிக்சல்கள் தீர்மானத்துடன் வருகிறது. இது ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 720 மூலம் இயக்கப்படுகிறது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது.

ZTE பிளேட் 20 5ஜி: கேமரா
ZTE பிளேட் 20 5ஜி ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா அம்சங்கள் உள்ளது. அது 16 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா இருக்கிறது. இதன் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

4000 எம்ஏஎச் பேட்டரி
ZTE பிளேட் 20 5ஜி ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி இருக்கிறது. இதில் வேகமான சார்ஜிங் ஆதரவு உள்ளது. மேலும் இணைப்பு விருப்பங்களில் வைபை, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆகியவை அடங்கும். பாதுகாப்பு அம்சத்திற்கான கைரேகை சென்சார் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications