டூயல் டச் டிஸ்பிளே; 20எம்பி "ஒற்றை" முன் & பின்பக்க கேமராவுடன் அக்ஸோன் எம்.!
இதன் டூயல் மோட் என்ற பயன்முறை இரண்டு அலகுகளை இரண்டு தனித்தனி காட்சி அலகுகளாக செயல்படுத்துகிறது.
இசெட்டிஇ நிறுவனம், இன்று அதன் புதிய தனிதத்துவமான ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அக்ஸோன் எம் என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த புத்தம்புதிய ஸ்மார்ட்போன் ஒரு சுவாரஸ்யமான காட்சி நுட்பத்துடன் ஒரு மடக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக வெளியாகியுள்ளது. அதாவது, ஒரு கீல் பயன்படுத்தி இணைக்கப்பட்ட இரண்டு காட்சி அலகுகளுடன் வருகிறது.
உண்மையில் அக்ஸோன் எம் ஆனது எதிர்காலத்திலிருந்து வந்திருக்கும் என்பது போல தோன்றுகிறது. இருப்பினும் வளைந்திருக்கும் காட்சிகளைக் கொண்டிருக்காது. இதன் இரண்டாம் நிலை ஸ்க்ரீன் ஆனது மடக்கக்கூடிய வசதி கொண்டிருக்கிறது மற்றும் விரிவாக்கப்படும் போது 6.75 இன்ச் டிஸ்பிளே ஏன அளவை எட்டும்.

எச்டி1080பி தீர்மானம்
மிகவும் அசாதாரணமான வடிவமைப்பை கொண்டுள்ள இக்கருவியின் அம்சங்களை பொறுத்தமட்டில், இரண்டு எல்சிடி டிஸ்ப்ளே அலகுகள் கொண்டுள்ளது மற்றும் இரண்டுமே எச்டி1080பி தீர்மானம் கொண்ட 5.2 அங்குல அளவுகளில் வந்துள்ளது.

இரண்டு அலகு
முன்னுரிமையின் அடிப்படையில் இதன் இரட்டை-டிஸ்பிளேக்கள் நான்கு வெவ்வேறு வழிகளில் கட்டமைக்கப்படுகின்றன. மேலும் இதன் டூயல் மோட் என்ற பயன்முறை இரண்டு அலகுகளை இரண்டு தனித்தனி காட்சி அலகுகளாக செயல்படுத்துகிறது.

மிரர் மோட்
தனித்தனி டிஸ்பிளேவாக செயல்பட்டாலும் கூட இரண்டு பயன்பாடுகளும் ஒருவருக்கொருவர் இணைந்து செயல்படவும் அனுமதிக்கிறது. இதன் மிரர் மோட் என்ற பயன்முறையானது இரண்டு காட்சிகளில் ஒரே உள்ளடக்கத்தை இயக்குவதற்கு அனுமதிக்கிறது.

'பாரம்பரிய முறை' டிஸ்பிளே
அதே நேரத்தில் வழக்கமான 'பாரம்பரிய முறை' டிஸ்பிளே கொண்டுள்ளதால், அக்ஸோன் எம் ஆனது ஒரு சாதாரண ஸ்மார்ட்போன் போன்றும் நம்மை உணரவைக்கும். பின்னடைவாக, கடந்த ஆண்டு வெளியான க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 821 எஸ்ஓசி கொண்டு தான் இக்கருவி இயங்குகிறது.

ஒரு பலமான அம்சம்
4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்புடன் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இக்கருவி ஒரே ஒரே கேமரா மட்டுமே கொண்டு வருகிறது. அந்த கேமராவை ஒரு முன் அல்லது பின்புற கேமராவாகப் பயன்படுத்துவதற்கு டிஸ்ப்ளேக்களை வெறுமனே நீங்கள் புரட்டிகினால் போதும். அதுவும் 20 எம்பி பின்பக்க கேமரா என்பது ஒரு பலமான அம்சமாக திகழ்கிறது.

ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட்
ஒரு சக்திவாய்ந்த 3180 எம்ஏஎச் என்ற பேட்டரி அலகு கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் டூயல் ஸ்பீக்கர்கள், ஒரு 3.5 மிமீ ஹெட்ஜாக் ஆகிய அம்சங்களுடன் ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட் கொண்டு இயங்குகிறது.

விரைவில்
அமெரிக்ககாவில் 725 டாலர் என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ள இக்கருவி ஏடி&டி மூலம் பிரத்தியேகமாக விற்கப்படும். மற்றும் ஜப்பான், சீனாவி மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் விரைவில் இது செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications