டூயல் கேம் எல்லாம் பழசு.. இதோ டூயல் ஸ்க்ரீன் ஸ்மார்ட்போன்.!
இசெட்டிஇ (அக்ஸோன் எம் ஆனது சீன சான்றளிப்பு வலைத்தளமான டிஇஎன்ஏஏ-வில் (TENAA) காணப்பட்டது.வெளியாகும் சீன மாதிரியானது அமெரிக்காவில் தொடங்கப்பட்டதைப் போலவே இருக்கிறது.
இசெட்டிஇ (ZTE) நிறுவனம் அதன் முதல் இரட்டை திரை தொலைபேசியான - இசெட்டிஇ அக்ஸோன் எம் ஸ்மார்ட்போனை கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்காவில் அறிமுகமானது. அதனை தொடர்ந்து இப்போது இக்கருவி வரும் வாரங்களில் அதன் சீன விற்பனையை தொடங்கவுள்ளது.

இசெட்டிஇ (அக்ஸோன் எம் ஆனது சீன சான்றளிப்பு வலைத்தளமான டிஇஎன்ஏஏ-வில் (TENAA) காணப்பட்டது. வெளியாகும் சீன மாதிரியானது அமெரிக்காவில் தொடங்கப்பட்டதைப் போலவே இருக்கிறது. இக்கருவியின் அம்சங்களை பற்றி விரிவாக காண்போம்.

சற்று பருமனான கருவி
இது அளவீட்டில் 150.8 x 71.64 x 12.10 மிமீ மற்றும் 230 கிராம் எடையைக் கொண்டுள்ளது. இதர ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடுகையில் சற்று பருமனான கருவியாக காட்சியளிக்கிறது. அதற்கு காரணம் அதன் இரட்டை திரை தான்.

டூயல் மோட்
இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சமாக அதன் இரட்டை திரைகளும், அதன் நான்கு வெவ்வேறு முறைகளும் திகழ்கின்றன. இதன் டூயல் மோட் ஆனது பயனர்கள் திரைகளில் இரண்டு வெவ்வேறு பயன்பாடுகளை திறக்க உதவும்.

எக்ஸ்டெண்டட் மோட்
உதாரணமாக, நீங்கள் ஒரு திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருக்கும்போது மற்றொரு திரையில் பேஸ்புக் அல்லது வாட்ஸ்ஆப்பை திறக்கலாம் அல்லது சரிபார்க்கலாம். இதன் எக்ஸ்டெண்டட் மோட் மூலம் இரண்டு திரைகளையும் ஒன்றாக்கி ஒரு 6.75 அங்குல முழு எச்டி டிஸ்பிளேவாக பயன்படுத்தலாம்.

மிரர் மோட்
இதன் மிரர் மோட் கொண்டு இரண்டு திரையிலும் ஒரே உள்ளடக்கத்தை காட்சிப்படுத்த வைக்கலாம். இதனால் நீங்கள் மற்றும் உங்கள் நண்பர்கள் ஒரே உள்ளடக்கத்தில் ஒரே நேரத்தில் பார்க்கலாம்.

ட்ரெடிஷனல் மோட்
கடைசியாக இதன் ட்ரெடிஷனல் மோட் ஆனது, இந்த ஸ்மார்ட்போனை ஒரு சாதாரணமான மற்றும் பாரம்பரியம் மிக்க கருவியாக மாற்ற உதவும். எக்ஸோன் எம் ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில் இது ஒரு 5.2 அங்குல முழு எச்டி எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

சேமிப்பு
முன்னர் கூறியபடி இதை ஒரு 6.75 அங்குல திரையாகவும் மாற்ற முடியும். க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 821 செயலி மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு கொண்டு இயங்கும் இக்கருவி, இயற்கையிலேயே எந்தவொரு மெமரி விரிவாக்க ஆதரவும் வழங்காது.

கேமரா
கேமராவை பொறுத்தமட்டில், ஒரே ஒரு 20 மெகாபிக்சல் சென்சார் கொண்ட ரியர் கேமராவை கொண்டுள்ளது. செல்பீ கேமரா கிடையாது. ஏனெனில் அந்த 20 எம்பி கேமராவையே முன்பக்கமாக திருப்பி செல்பீ எடுத்துக்கொள்ள முடியும்.

பேட்டரி
ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட் கொண்டு இயங்கும் இக்கருவி ஒரு 3180எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இக்கருவி டூயல் ஸ்பீக்கர்கள் மற்றும் 3.5மிமீ ஹெட்ஜாக் ஆதரவு கொண்டுள்ளதும் குறிப்பிடத் தக்கது.


Click it and Unblock the Notifications