டூயல் ஸ்கிரீன் வசதியுடன் இசெட்இ அக்ஸோன் எம் அறிமுகம்.!

By Prakash
|

இசெட்இ நிறுவனத்தின் முதல் இரட்டை திரை அக்ஸோன் எம் ஸ்மார்ட்போன் மாடல் கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்காவில் அறிமுகமானது, அதை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஜனவரி 16-ம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டூயல் ஸ்கிரீன் வசதியுடன் இசெட்இ அக்ஸோன் எம் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போனில் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளது, மேலும் டூயல் ஸ்கிரீன் கொண்டு வெளிவருதால் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இந்த அக்ஸோன் எம் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 5.2-இன்ச் முழுஎச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, ஆனால் இதன் எக்ஸ்டெண்ட்
மோட் மூலம் இரண்டு திரைகளையும் ஒன்றாக்கி 6.75-இன்ச் எச்டி டிஸ்பிளேவாக பயன்படுத்த முடியும்.

 ஸ்னாப்டிராகன் 821:

ஸ்னாப்டிராகன் 821:

இசெட்இ அக்ஸோன் எம் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 செயலியைக் கொண்டுள்ளது. அதன்பின்பு
ஆண்ட்ராய்டு 7.1.2 என்ற இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். மேலும் டூயல் ஸ்பீக்கர்
அமைப்பு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

மிரர் மோட் :

மிரர் மோட் :

இதன் மிரர் மோட் கொண்டு இரண்டு திரையிலும் ஒரே உள்ளடக்கத்தை காட்சிப்படுத்த வைக்கலாம். இதனால் நீங்கள் மற்றும் உங்கள் நண்பர்கள் ஒரே உள்ளடக்கத்தில் ஒரே நேரத்தில் பார்க்கலாம்.

கேமரா:

கேமரா:

இந்த இசெட்இ அக்ஸோன் எம் ஸ்மார்ட்போனில் செல்பீ கேமரா கிடையாது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 20எம்பி சென்சார் கொண்ட
ரியர் கேமராவைக் கொண்டுள்ளது, இந்த கேமராவையே முன்பக்கமாக திருப்பி செல்பீ எடுத்தகொள்ள முடியும்.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 3180எம்ஏஎச்:

3180எம்ஏஎச்:

இசெட்இ அக்ஸோன் எம் ஸ்மார்ட்போனில ஸ்மார்ட்போனில் 3180எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
ZTE Axon M with dual screen foldable display to launch in China on January 16; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X