சாம்சங் பின்னடைவு; வெளியாகிறது புரட்சிகரமான டூயல் டிஸ்பிளே அக்ஸோன் எம்.!
இக்கருவி வருகிற அக்டோபர் 17-ஆம் தேதியன்று நியூயார்க்கில் அதன் வெளியீட்டை உறுதிப்படுத்தியுள்ளது.
பல ஆண்டுகளாக வெளியாகி வரும் அறிக்கைகள் மற்றும் வதந்திகளின்படி போல்டபிள் ஸ்மார்ட்போன்கள் எனப்படும் நடக்கக்கூடிய கருவிகள் மிகவும் விரைவில் வெளியாகும் என்பது போல் தெரிகிறது. அதெல்லாம் சாத்தியமில்லை என்று நினைக்கும் மக்களுக்கு, நெகிழ்வான ஸ்மார்ட்போன்கள் தான் சாத்தியம் தன என்பதை நிரூபிக்கும் ஒரு புதிய லீக்ஸ் தகவல் இதோ.!
வெளியாகியுள்ள ஒரு புதிய கசிவு நம்பப்படுமாயின், வருகிற அக்டோபர் 17-ஆ ம் தேதி, அக்ஸோன் மல்டி (Axon Multy) என்ற குறியீட்டு பெயரின்கீழ் வெளியாகும் அக்ஸோன் எம் ஸ்மார்ட்போன் தான் முதல் உண்மையான இரட்டை-திரை மடிப்பு ஸ்மார்ட்போன் ஆகும்.

அக்ஸோன் எம்
இசெட்டிஇ நிறுவனத்தின் தயாரிப்பான - எதிர்பார்க்கப்படும் - இந்த அக்ஸோன் எம் ஸ்மார்ட்போன் ஆனது அதன் முழு மகிமையுடன் வெளிப்படுத்தும் புகைப்படம் ஒன்றை ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி பகிர்ந்துள்ளது.

'ஹிஞ்' போன்ற அமைப்பு
வெளியான புகைப்படத்திலிருந்து இந்த ஸ்மார்ட்போனின் முதன்மை மற்றும் இரண்டாம் டிஸ்பிளே ஆனது ஜன்னல் மற்றும் கதவுகளில் பயன்படுத்தப்படும் 'ஹிஞ்' போன்ற அமைப்பு கொண்டு இணைக்கப்பட்டிருக்கலாம் என்பதுபோல் தெரிகிறது.

அக்டோபர் 17
1920x2160 பிக்ஸல் என்ற திரை தீர்மானம் கொண்ட 6.8 இன்ச் டிஸ்ப்ளேயுடன் இரட்டை முழு எச்டி டிஸ்ப்ளேவை கொண்டிருக்கலாமென எதிர்பார்க்கப்படும் இக்கருவி வருகிற அக்டோபர் 17-ஆம் தேதியன்று நியூயார்க்கில் அதன் வெளியீட்டை உறுதிப்படுத்தியுள்ளது.

விலை நிர்ணயம்
துரதிருஷ்டவசமாக, இந்த ஸ்மார்ட்போன் சார்ந்த பற்றிய அதிக குறிப்புகள் மற்றும் விலை நிர்ணயம் போன்ற தகவல்கள் பற்றிய எந்த வார்த்தைகளும் இல்லை. இருப்பினும் இந்த கைபேசியை ஒரு பிரீமியம் பிரிவில் விலைக்கு எதிர்பார்க்க முடியும்.

பிசி பயன்பாடு
மேலும், ஒரு வழக்கமான ஸ்மார்ட்போனாக இது செயல்படும் என்று வெளியான அறிக்கை கூறுகிறது. இதன் இரட்டை திரைகளானது பிசி பயன்பாடு போன்றதொரு அனுபவத்தை வழங்கும், வெவ்வேறு திரைகளில் ஒரே நேரத்தில் இரண்டு பயன்பாடுகள் இயக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நேரடி போட்டி
இது உண்மையாகும் பட்சத்தில் சமீபத்தில் வெளியான ஐபோன் எக்ஸ், சாம்சங் கேலக்ஸி நோட் 8 மற்றும் எல்ஜி வி30 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு அக்ஸோன் எம் ஒரு நேரடி போட்டியை உண்டாகும் என்பதில் சந்தேகமில்லை.

கேலக்ஸி எக்ஸ் போல்டபில்
நவீன கால ஸ்மார்ட்போன்களின் புதிய எல்லையை திறக்கும் இந்த புதிய இசெட்டிஇ அக்ஸோன் எம் ஸ்மார்ட்போனின் இரண்டு டிஸ்பிளே அம்சத்தினை, சாம்சங் அதன் கேலக்ஸி எக்ஸ் போல்டபில் ஸ்மார்ட்போனில், மிக விரைவில் அறிமுகப்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.


Click it and Unblock the Notifications