Home
Mobile

64எம்பி ரியர் கேமராவுடன் ZTE ஆக்சன் 30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

சீனாவில் ZTE நிறுவனம் தனது புதிய ZTE ஆக்சன் 30 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இது இரண்டாம் தலைமுறை அன்டர் டிஸ்ப்ளே கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்று கூறப்படுகிறது.

 64எம்பி ரியர் கேமராவுடன் ZTE ஆக்சன் 30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த புதிய ZTE ஆக்சன் 30 5ஜி சாதனம் 6.92 இன்ச் FHD AMOLED டிஸ்பிளே வடிவமைப்பை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 1,080x2,400 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸமார்ட்போன் வெளிவந்துள்ளது.

ZTE ஆக்சன் 30 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு மைஒஎஸ் 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

 64எம்பி ரியர் கேமராவுடன் ZTE ஆக்சன் 30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ZTE ஆக்சன் 30 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஆக்சன் 30 5ஜி சாதனத்தின் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

இந்த ஸ்மார்ட்போனில் 4200 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 55 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, பவர் டெலிவரி, குவிக் சார்ஜ் 4+ போன்ற சிறப்பான வசதிகளும் இந்த ஆக்சன் 30 5ஜி சாதனத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

 64எம்பி ரியர் கேமராவுடன் ZTE ஆக்சன் 30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

5 ஜி, வைஃபை 6, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் புளூடூத் வி 5.1 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ZTE ஆக்சன் 30 5ஜி மாடல். விரைவில் இந்த சாதனம் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் ZTE ஆக்சன் 30 5ஜி மாடலின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.25000-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
ZTE Axon 30 5G Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X