அறிமுகம்: ரூ.8,236/-க்கு ஆண்ட்ராய்டு ஓரியோவுடன் அறிமுகம் ZTE A530.!
ZTE A530 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தவரை, இது ஒரு மெட்டல் யூனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ளது.
சீன நிறுவனமான ZTE, அதன் ZTE A530 என்றழைக்கப்படும் ஒரு புதிய ஸ்மார்ட்போனை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை 799 யுவான் ஆகும். அதாவது இந்திய விலைப்படி, சுமார் ரூ.8,236/- ஆகும். இது சில்வர் நிறத்தில் அறிமுகமாகியுள்ளது.

ZTE A530 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தவரை, இது ஒரு மெட்டல் யூனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ளது மற்றும் ஒரு 5.45 இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது. அது 18: 9 என்கிற திரை விகிதம் மற்றும் 1440 × 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 1.5GHz மீடியாடெக் MT6739 செயலி மூலம் இயக்கப்படுகிறது. உடன் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பும் கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக மெமரி நீட்டிக்கும் ஆதரவும் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஒரு 2,660 mAh திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.
கேமராத்துறையை பொறுத்தவரை, ZTE A530 ஆனது ஒரு 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அதன் பின்புற பக்கத்தில் கைரேகை ஸ்கேனர் எதையும் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2ஜி / 3ஜி / 4ஜி, வைஃபை 802.11 b/g/n, ஏ-ஜிபிஎஸ், மைக்ரோ USB போர்ட், ப்ளூடூத் 4.1 மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக் போன்ற அனைத்து அடிப்படை இணைப்பு விருப்பங்களையும் கொண்டுள்ளது.
இதற்கிடையில், நேற்று, மற்றொரு ZTE ஸ்மார்ட்போன் ஆன Blade A606-ன் பிரதான அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் போன்ற தகவல்கள் வெளியானது. அதன்படி, ZTE பிளேட் A606 ஆனது 5.45 இன்ச் எச்டி டிஸ்ப்ளே (720x1440 பிக்சல் தீர்மானம் மற்றும் 18: 9 விகித விகிதம்), MT6739 1.3 GHz க்வாட்-கோர் ப்ராஸசர், 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு ஆகிய அம்சங்களை கொண்டிருக்கும்.
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தில் செயல்படும் இந்த ZTE பிளேட் A606 ஸ்மார்ட்போன் ஒரு 2600mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கேமராத்துறையை பொறுத்தவரை, LED ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் செல்பீக்கள்/ வீடியோ அழைப்புகளுக்கான ஒரு 2 மெகாபிக்சல்செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

அளவீட்டில், 46.3 x 69.2 x 8.5 மிமீ என்கிற பரிமாணத்தைக் கொண்டுள்ளது மற்றும் 140 கிராம் எடையுள்ளது. விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ZTE பிளேட் A606 799, சுமார் ரூ.8,277/- என்கிற புள்ளியை எட்டலாம்.


Click it and Unblock the Notifications