ஜோப்போ கலர் M5: சீனாவில் இருந்து அறிமுகமாகும் புதிய வகை ஸ்மார்ட்போன்

By Siva
|

ஏற்கனவே இந்திய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் சீன நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் தற்போது இன்னொரு சீன நிறுவனமான ஜோப்போ (Zopo) என்ற நிறுவனமும் தனது முதல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஜோப்போ கலர் M5: சீனாவில் இருந்து அறிமுகமாகும் புதிய வகை ஸ்மார்ட்போன்

ஜோபோ கலர் M5 என்ற பெயரில் 4G அம்சத்துடன் அறிமுகமாகும் இந்த மாடல் ஏற்கனவே சீனாவில் வெளிவந்து வெற்றி பெற்ற கலர் M4 மாடலின் அடுத்த வகை.

இந்த ஸ்மார்ட்போனில் ஏற்கனவே ஜோப்போவின் முக்கிய ஆப்ஸ்களான ஜோபோ கேர், ஜோப்போ வேர்ல்டு உள்பட பல ஆப்ஸ்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டிருப்பதோடு, இந்த ஸ்மார்ட்போனின் கீபோர்டு தமிழ் உள்பட 25 இந்திய மொழிகளில் சப்போர்ட் செய்யும்படி அமைந்துள்ளது.

ஜோபோ கலர் M5 ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள்:

ஜோபோ கலர் M5 ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள்:

டூயல் சிம், 5 இன்ச் FWVGA (480x854 pixels) டிஸ்ப்ளே மற்றும் குவாட்கோர் மெடியாடெக் MT6737M SoC வகை பிராஸசர், 1GB ரேம், 16GB இன்னர் ஸ்டோரேஜ், அதிகப்படியான ஸ்டோரேஜூக்கு 64 GB வரை பயன்படுத்தப்படும் மைக்ரோ எஸ்டி கார்ட் ஆகிய சிறப்பு அம்சங்கள் இந்த போனில் உண்டு. மேலும் 2100mAh பேட்டரியுடன் ஆண்ட்ராய்டு OS v6.0 வகையை சேர்ந்தது இந்த ஸ்மார்ட்போன்

கேமிரா எப்படி இருக்கும்?

கேமிரா எப்படி இருக்கும்?

ஜோபோ கலர் M5 ஸ்மார்ட்போனின் கேமிரா 5MP பவர் கொண்ட பின்கேமிரா, 2MP பார் கொண்ட செல்பி கேமிரா ஆகியவையுடன் 1080P வீடியோக்கள் பிளே ஆகும் வகையிலும், ரிகார்ட் செய்யும் வகையிலும் உள்ளது. மேலும் இந்த போனின் கேமிராவில் பனோரமோ மோட், ஸ்மைல் ஷாட் மோட் மற்றும் கண்டினியுங் ஷாட் மோட் ஆகிய சிறப்பு அம்சங்கள் உண்டு.

மிட்-ரேன்ஜ் பட்ஜெட்டில் ஹை-எண்ட் அனுபவம் வழங்கும் எப்3.!மிட்-ரேன்ஜ் பட்ஜெட்டில் ஹை-எண்ட் அனுபவம் வழங்கும் எப்3.!

வேறு என்னென்ன வசதிகள்:

வேறு என்னென்ன வசதிகள்:

ஜோபோ கலர் M5 ஸ்மார்ட்போனில் 4G VoLTE, வைபை, ஜிபிஎஸ், புளூடூத், ஆகியவைகளும், ஆக்சிலெரோமீடர், லைட் சென்சார், பிராக்ஸிமிட்டி சென்சார் ஆகிய சென்சார்களும் உள்ளது. இந்த போன் 143.7x71x9.7mm அளவில் 142 கிராம் எடையில் அமைந்துள்ளது.

இதெல்லாம் ஓகே, என்ன விலை?

இதெல்லாம் ஓகே, என்ன விலை?

மேற்கண்ட சிறப்பு வசதிகள் கொண்ட இந்த ஜோபோ கலர் M5 ஸ்மார்ட்போனின் விலை வெறும் ரூ.5,999 மட்டுமே. இந்தியா முழுவதிலும் புகழ்பெற்ற ரீடெயில் கடைகளில் கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஐந்துவித வித்தியாசமான வண்ணங்களில் கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஒரு வருடம் மாற்றத்தக்க வகையில் வாரண்டி உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Zopo Color M5 is a dual-SIM smartphone and comes with a 5-inch FWVGA (480x854 pixels) display.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X