சியாமியின் சியாமி ரெட் 3S மற்றும் ஜோபோ கலர் F2 இடையேயான போரில் வெற்றி யாருக்கு?

By Siva
|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஏற்கனவே உலகின் பல நாடுகளின் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் போட்டி போட்டு தங்களுடைய தயாரிப்புகளை மார்க்கெட்டிங் செய்து வரும் நிலையில் தற்போது இன்னொரு சீன நிறுவன்மான ஜோப்போ (Zopo) நிறுவனமும் இந்திய சந்தையில் காலடி வைத்துள்ளது.

சியாமியின் சியாமி ரெட் 3S மற்றும் ஜோபோ கலர் F2 இடையேயான போரில் வெற்றி

ஜோப்போ நிறுவனத்தின் தயாரிப்பால ஜோபோ கலர் F2 மாடல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகவுள்ள சியாமி நிறுவனத்தின் சியாமி ரெட் 3S மாடலுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஜியோ வெல்கம் ஆஃபர் மார்ச் 2017 வரை நீட்டிக்காது..!?

ஆசிய நாடுகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் சியாமி நிறுவனம் விரைவில் இந்தியாவில் ரூ.6999 விலையில் சியாமி ரெட் 3S என்ற மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த மாடலுக்கு ஜோபோ மாடலுக்கும் என்ன வித்தியாசம், வியாபார ரீதியில் என்ன போட்டி என்பதை தற்போது பார்ப்போம்

பெரிய டிஸ்ப்ளேவில் வெளிவருகிறது ஜோபோ கலர் F2 ஸ்மார்ட்போன்

பெரிய டிஸ்ப்ளேவில் வெளிவருகிறது ஜோபோ கலர் F2 ஸ்மார்ட்போன்

ஜோபோ கலர் F2 மாடல் 5.5 இன்ச் டிஸ்ப்ளேவில் 720P பேனலில் வெளிவருகிறது. ஆனால் சியாமி ரெட் 3S மாடலில் 5 இன்ச் டிஸ்ப்ளேவில் இருந்தாலும் அதே 720P பேனலில் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹார்டுவேரில் எந்த மாடல் டாப்?

ஹார்டுவேரில் எந்த மாடல் டாப்?

ஹார்டுவேரை பொருத்தவரையில் சியாமி ரெட் 3S மாடலில் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் என்ற புதிய வகை சிப்செட்-ஐ கொண்டுள்ளது. ஆனால் ஜோபோ கலர் F2 மாடல் ஸ்மார்ட்பொன் மெடியாடெக் MT6737 சிப்செட் உடன் ஆக்டோகோர் சிப்செட்டையும் கொண்டுள்ளது. ஆனால் மெடியா டெக் சிப்செட் அதிக வெப்பமாகும் தன்மை உடையது என்பது அனைவரும் அறிந்ததே

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இரு மாடல்களிலும் உள்ள ரேம் அளவுகள் என்ன?

இரு மாடல்களிலும் உள்ள ரேம் அளவுகள் என்ன?

சியாமி ரெட் 3S மாடலை பொருத்தவரையில் இரண்டுவிதமான ரேம் அம்சங்களில் வெளிவருகிறது. 2GB ரேம் மற்றும் 3GB ரேம் என இரண்டு வகையான ரேம் கொண்ட மாடல்களை சியாமி நிறுவனம் வெளியிடுகிறது. ஆனால் ஜோபோ கலர் F2 மாடல் ஸ்மார்ட்போன் 2GB ரேம் மாடலை மட்டுமே வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமிரா எந்த மாடலில் பெட்டர்

கேமிரா எந்த மாடலில் பெட்டர்

ஒரு நல்ல ஸ்மார்ட்போன் என்பதை அதில் உள்ள கேமிரா அம்சத்தை மட்டுமே முடிவு செய்யப்படுகிறது. அந்த வகையில் சியாமி ரெட் 3S மாடலில் 13MP பின் கேமிராவும் 8 MP செல்பி கேமிராவும் உள்ளது. அதே நேரத்தில் ஜோபோ F2 மாடலில் 8MP பின் கேமிராவுடன் LED பிளாஷ் அம்சமும், 5 MP செல்பி கேமிராவும் உள்ளது

எந்த மாடலில் பேட்டரி பெட்டர்?

எந்த மாடலில் பேட்டரி பெட்டர்?

இதுவரை வெளிவந்துள்ள சியாமி மாடல்கள் அனைத்திலுமே 4000mAh பேட்டரிதான் வந்துள்ளது. அதேபோல் இந்த சியாமி ரெட் 3S மாடலிலும் அதே 4000mAh பேட்டரிதான் உள்ளது. சியாமியின் அனைத்து மாடல்களிலும் இரண்டு நாட்கள் சார்ஜ் நிற்கும் என்பது அதை பயன்படுத்திய அனைவரும் அறிந்ததே. ஜோபோ F2 மாடலில் 2300mAh பேட்டரி மட்டுமே உள்ளது. இதனால் சியாமியுடனான போட்டியில் பின் தங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முடிவா என்ன சொல்ல வர்றோம்னா.....

முடிவா என்ன சொல்ல வர்றோம்னா.....

மேற்கண்ட தகவல்களில் இருந்து முடிவாக என்ன சொல்ல வர்றோம்ன்னா, சியாமிதான் இப்போதைக்கு பெஸ்ட். இறுதியாக இன்னொரு விஷயமும் உள்ளது. சியாமியின் சியாமி ரெட் 3S மாடல் ரூ.6999 என்று ஏற்கனவே பார்த்தோம். ஆனால் ஜோபோ கலர் F2 மாடல் ரூ.10,790 என்ற விலையில் சந்தைக்கு வரவுள்ளது. கிட்டத்தட்ட 4000 அதிகம் இருப்பதால் வாடிக்கையாளர்கள் பார்வை எங்கு போகும் என்பதை நாம் சொல்ல தேவையே இல்லை.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Zopo Color F2 is the new smartphone from the Chinese smartphone company which was launched in India yesterday. Here's how it goes against Xiaomi Redmi 3s.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X