ஆண்ட்ராய்டு நௌவ்கட் & டூயல் கேம் உடன் ஸ்பீட் எக்ஸ் ஸ்மார்ட்போன்.!

Written By:

கடந்த மாதம் வெளியான லீக்ஸ் தகவல்கள் உறுதிப்படுத்தியதைப்போலவே ஸோபோ (Zopo) நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக அதன் புதிய ஸ்மார்ட்போன் ஆன ஸ்பீடு எக்ஸ் சாதனத்தை அறிவித்துள்ளது. ஸோபோ ஸ்பீட் எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது நான்கு வெவ்வேறு வண்ண விருப்பங்களில் - கர்னல் பிளாக், ராயல் கோல்ட் , ஆர்ச்சிட் கோல்ட் மற்றும் ஸ்பேஸ் கிரே - கிடைக்கும்.

சாதனத்தின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை பற்றிய விவரங்களை இன்னும் நிறுவனம் வெளியிடவில்லை. ரட்டான் டாட்டா மூலம் நிதியுதவி செய்யப்பட்ட சாட்பாட் அடிப்படையாக கொண்ட ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) நிக்கி இந்த ஸ்பீட் எக்ஸ் ஸ்மார்ட்போனில் இணைக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
நிக்கி

நிக்கி

அதாவது நிக்கி மூலம், பயனர்கள் பில்ஸ், பஸ், ஹோட்டல், டிக்கெட் மற்றும் பலவற்றை செலுத்தும் நோக்கி சாட் செய்யலாம். இந்த ஸ்பீட் எக்ஸ் கருவி மூலம் பயணம், பொழுதுபோக்கு, தினசரி பயன்பாடுகள் மற்றும் பிற இ- காமர்ஸ் சேவைகளை மிக எளிமையான வழிமுறைகளை கொண்டு பெறலாம்.

டிஸ்பிளே

டிஸ்பிளே

ஸோபோ ஸ்பீட் எக்ஸ் ஒரு உலோக யூனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ளது மற்றும் 1920 x 1080 பிக்சல்கள் என்ற தீர்மானம் கொண்ட ஒரு 5 அங்குல முழு எச்டி 2.5டி ஏஆர்சி டிஸ்பிளே கொண்டுள்ளது.

ரேம்

ரேம்

மாலி டி720ஜிபியூ உடன் 1.3ஜிகாஹெர்ட்ஸ் எம்டி6753 ஆக்டா-கோர் 64-பிட் செயலி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. இது ஒரு 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு மற்றும் மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை விரிவாக்க ஆதரவும் வழங்குகிறது.

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்குகிறது மற்றும் ஒரு 2680எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. ;மேலும் சாதனத்தின் பின்புறம் ஒரு கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது.

கேமரா

கேமரா

கேமரா துறையை பொறுத்தமட்டில் ஸ்பீட் எக்ஸ் 13 மெகாபிக்சல் முதன்மை மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை ரியர் கேமரா கொண்ட ஒரு இரட்டை கேமரா அமைப்பை வழங்குகிறது. முதன்மை கேமரா எல்இடி பிளாஷ், எப் / 2.2 துளை, ஆம்னிவிஷன் ஓவி13850 சென்சார் உடன் வருகிறது. முன்பக்கம் அதே ஆம்னிவிஷன் ஓவி12830 சென்சார், எப் / 2.0 துளை, மென்மையான எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது. இதன் மென்மையான ஒளி எல்இடி ப்ளாஷ் குறைந்த மின்னோட்டத்தில் கூட செல்பீக்கள் எடுக்க உதவுகிறது.

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவு

மேலும் ஸ்பீட் எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது ப்ளூடூத் 4.0, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் எஃப்எம் ரேடியோ ஆகிய இணைப்பு ஆதரவுகளுடன் கலப்பின இரட்டை சிம், 4ஜி எல்டிஇ , வைஃபை ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது. அளவீட்டில் இந்த கைபேசியில் 8.1 மிமீ மற்றும் 131 கிராம் எடையுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
Zopo announces Speed X smartphone with Android Nougat and dual camera setup. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot